திருப்பத்தூரில் பகீர்.. 'நான் இல்லாம நீ எப்படி இருப்ப?' மனைவியை பெட்ரோல் ஊற்றிய எரித்த சைக்கோ கணவர்
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கிட்னி கோளாரால் அவதிப்பட்டு வந்த இளைஞர், தான் இல்லாமல் மனைவியால் வாழ முடியாது என்று கருதி, மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் புதுபூங்குளம் பகுதியில் வசிப்பவர் ஓட்டுநர் சதாசிவம் மகன் சத்தியமூர்த்தி. 30 வயதான இவர், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட கொட்டாவூர் பகுதியில் வசிக்கும் பானிபூரி வியாபாரி பெரியசாமி அமுதா மகள் திவ்யா (24) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்குத் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு வர்ஷினி ஸ்ரீ என்ற 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருப்பத்தூர் தம்பதி
இந்நிலையில் சத்தியமூர்த்தி திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் பகுதியில் வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையம் நடத்தி வந்துள்ளார். மனைவி திவ்யா திருப்பத்தூர் குனிச்சி பகுதியில் உள்ள கல்லூரியில் தன்னுடைய தாய் வீட்டிலிருந்து தங்கி பிஎட் பயின்று வந்துள்ளார். திவ்யா கடந்த ஆண்டு தான் தனது பிஎட் படிப்பை முடித்திருந்தார்.

பண்டிகை
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மனைவி திவ்யாவை பண்டிகை கொண்டாடுவதற்காக தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்ற சத்தியமூர்த்தி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் திவ்யாவின் அம்மா வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார். இந்தச் சூழலில் மீண்டும் இன்று அதிகாலை 4 மணி அளவில் திவ்யாவின் அம்மா வீட்டிற்குச் சென்ற சத்தியமூர்த்தி, கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, திவ்யாவையும் குழந்தை வர்ஷினி ஸ்ரீயையும் அழைத்துச் சென்றுள்ளார்.

தீ வைத்த கொடூரம்
இருப்பினும், சத்தியமூர்த்தி திவ்யாவை கோயிலுக்கு அழைத்துச் செல்லவில்லை. திருப்பத்தூர் எலவம்பட்டி பகுதியிலுள்ள திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் தன்னுடைய மனைவி திவ்யாவை திடீரென பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அதிகாலை நேரத்தில் திவ்யாவின் அலறும் கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தீயில் எரிந்து கொண்டிருந்த திவ்யாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்ந்தனர்.

என்ன காரணம்
பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளதால் திவ்யாவுக்கு பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். சத்தியமூர்த்திக்கு இருந்த சிறுநீரக பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால் நீண்ட காலம் வாழ முடியாது என்று அவர் சிலர் அவரிடம் கூறியுள்ளனர். மனைவி தன்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது என்று கருதிய சத்தியமூர்த்தி, மனைவி திவ்யாவுக்குத் தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். பின்னர் மயக்க நிலையில் இருந்தபோது திவ்யாவின் மீது பொழுது பெட்ரோல் ஊற்றி எரித்ததாகக் கூறப்படுகிறது.

வெளியான வீடியோ
மேலும், சத்தியமூர்த்தி பேசுவது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் கிட்னி பிரச்சினை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்வதாகவும் இதில் வேறு யாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சத்தியமூர்த்தி கூறுகிறார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் உதவி ஆய்வாளர் அமர்நாத், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தற்போது வரை சத்தியமூர்த்தி மற்றும் அவரது மகள் வர்ஷினி ஸ்ரீ குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications