குடித்துவிட்டு ”குடிகார” மகனைக் கொல்ல முயன்ற தந்தை- போலீசாரால் கைது
சேலம்: சேலத்தில் குடிகார மகனை கொல்ல முயன்ற குடிகாரத் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள சின்னப்பம்பட்டி ஊராட்சி முனியம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வம். இவரது மகன் ஆனந்தராஜ் ஒரு விசைத்தறி தொழிலாளி.

இவர்களில் தந்தை, மகன் இருவரிடமும் குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் செல்வம் தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை விற்க கடந்த இரண்டாண்டாக முயற்சி செய்து வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சொத்தை பிரித்து தரும்படி மகன் ஆனந்தராஜ் தகராறு செய்து வந்துள்ளார்.
வழக்கம் போல போதையிலிருந்த இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் தந்தைக்கும், மகனுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த செல்வம் மகன் ஆனந்தராஜை மண்வெட்டியால் வெட்டியுள்ளார்.
இதில் தலையில் பலத்தகாயமடைந்த ஆனந்தராஜ், சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மகுடஞ்சாவடி போலீஸார் வழக்கு பதிந்து கொலை முயற்சி பிரிவின் கீழ் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications