"சென்னை மழையில் ஒரு சாகசப் பயணம்”- சிரிக்க வைத்துப் புரட்டிப் போட்ட மெட்ராஸ் சென்ட்ரல் வீடியோ!
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை புரட்டி எடுத்தாலும் எடுத்தது, சென்னையைக் குறிவைத்து மீம்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் களை கட்டி வருகின்றன.
அந்த வகையில் மெட்ராஸ் சென்ட்ரல் வெளியிட்டுள்ள மேன் வெஸ்சஸ் ரெயின் என்கின்ற வீடியோ டிஸ்கவரியின் "man vs wild" என்ற நிகழ்ச்சியின் நகைச்சுவை வடிவமாக வெளியாகி சென்னை மழையிலும் சிரிக்க வைத்துள்ளது.
பிரிச்சு மேஞ்ச மழை...வச்சு செஞ்ச மழை...மழையால் தீவாய் மாறிக் கிடக்கும் சென்னை என்று டிஸ்கவரி டப்பிங் போலவே பேசி வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது இந்த வீடியோ.

சாதாரண மனிதனின் பயணம்:
கொடூர ஜீவராசிகள் என அட்டைப் பூச்சி, நத்தையெல்லாம் காட்டி அதே மாடுலேஷனில் வேறு பேசுகின்றார்கள். இந்த சாதாரண மனிதனின் பயணம்... என்று கொட்டேஷன் வேறு.

டிபன் பாக்ஸ் பத்திரம்:
இந்த நீர் நிலையைக் கடந்துதான் நான் இன்னைக்கு ஆபிஸ் போகனும்...பாருங்க இந்த மழைல முக்கியமா நாம செய்ய வேண்டியது டிபன் பாக்ஸை பத்திரமா பேக் உள்ள வைக்க வேண்டியது என்கிறார் நம்ம சாதாரண மனிதன்.

ஆபிஸ் போலாம் வாங்க:
இந்த மாதிரி எவ்வளவு மழை பெஞ்சாலும் ரமணன் சார் சொன்னா ஸ்கூலுக்குதான் லீவ் விடுவாங்க ஆபிசுக்கு இல்லை என்கின்றார். ஆபிசுக்கு போனாதான் கிரெடிட் கார்ட், ஹோம் லோன்லாம் கட்ட முடியும் வாங்க அதலாம் கட்ட நாம ஆபிஸ் போவோம் வாங்க என்கிறார்.

டேஸ்டான இறால் மீன்:
இந்த மழையில் கிடைக்கும் இறால் மீன் புரோட்டின் நிறைந்த ஒன்று. அடிக்கடி தண்ணியப் பார்க்கறவங்களுக்கு பிரச்சினை இல்லை. இது மாதிரி எப்போவாவது பார்க்கிற சென்னை வாசிகளுக்கு இது பெரிய கஷ்டம் தான் என்று டயலாக்கில் தெறிக்க சாரி சிரிக்க விடுகிறார்.
வயிறு புண்ணாக கேரண்டி:
இன்னும் நிறைய நிறைய அப்படியே மேன் வெஸ்சஸ் வைல்டினை நம்ம சென்னைக்கு ஏற்ப கலாட்டாவாக மாற்றி வெளியிட்டுள்ளனர் குழுவினர். மொத்தத்தில் சிரிச்சு, சிரிச்சே வயிறும் புண்ணாக இந்த வீடியோவும் கேரண்டி!
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications