Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவசங்கள் என்னென்ன? அதிமுக தேர்தல் அறிக்கையை மார்ச் 11ல் வெளியிடுகிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலுக்காக வாக்காளர்களை கவரும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 11ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சரியாக 72 தினங்கள் இருக்கின்றன. வாக்காளப்பெருமக்களே... எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்து ஏழைகளாக இருக்கும் உங்களை குபேரன்களாக்குவோம் என்கிற ரீதியில் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும், வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தல் அறிக்கை வெளியிடுவார்கள்.

அதிமுகவும் இந்த சட்டசபை தேர்தலுக்கு பல முக்கிய அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாதக ரீதியாக கூட்டுத்தொகை 2 என வரும் எண்கள் ராசியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அவரது செயல்பாடுகள் பெரும்பாலும் அதைச் சுற்றியே அமைகிறது. எனவே, முதல்வருக்கு 2 என்ற எண் ராசியாக இருப்பதால் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வரும் 11ம் தேதி அவர் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.

அண்ணாவின் வாக்குறுதி

அண்ணாவின் வாக்குறுதி

1967களில் காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப திமுக, அப்போது நிலவிய அரிசி பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வை கிளறி விட்டது ரூபாய்க்கு 3 படி லட்சியம்... 1 படி நிச்சயம் என்று வாக்குறுதி அளித்து அரியணை ஏறினார் அண்ணா.

எம்.ஜி.ஆர் அறிக்கை

எம்.ஜி.ஆர் அறிக்கை

எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட 'சத்துணவு திட்டம்' மிகப்பெரிய அளவில் மக்களை கவர்ந்தது. இலவச மின்சாரம், மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச காலணி என அள்ளி வீசினார் எம்.ஜி.ஆர்.

சத்துணவில் முட்டை

சத்துணவில் முட்டை

1989ல் சத்துணவில் கூடுதலாக முட்டை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார் கருணாநிதி. 1991ல் ஆட்சிக்கு வர நினைத்த அதிமுக பஞ்சாயத்து அலுவலகங்களில் இலவச கலர்டிவி திட்டத்தை அறிவித்தது. இப்படி மாறி மாறி வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்தாலும் நிறைவேற்றுவது என்னவோ சில திட்ட்ங்களைத்தான்.

கருணாநிதி கதாநாயகன் அறிக்கை

கருணாநிதி கதாநாயகன் அறிக்கை

கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், திமுக வெற்றிக்கு, அக்கட்சி தேர்தல் அறிக்கை, முக்கிய பங்கு வகித்தது. ரேஷன் கடைகளில், கிலோ ஒரு ரூபாய்க்கு, 20 கிலோ அரிசி வழங்கப்படும்; வீடுகளுக்கு இலவச கலர், 'டிவி' வழங்கப்படும் என அறிவித்தது, மக்களிடம் பெரும் வரவற்பை பெற்றது. கதாநாயகன் தேர்தல் அறிக்கை என்று புகழ்தார் கருணாநிதி.

ஜெயலலிதா

ஜெயலலிதா

அதைத் தொடர்ந்து, 2011 சட்டசபை தேர்தலின் தேர்தல் அறிக்கையில், இலவசங்களுக்கு அ.தி.மு.க, முக்கியத்துவம் அளித்தது. 20 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம்; இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும்; திருமணமாகாத ஏழை பெண்களுக்கு, தாலிக்கு தங்கம் மற்றும் இலவச உதவித்தொகை வழங்கப்படும் என, அதிமுக அறிவித்தது. இதற்கு, மக்களிடம் வரவேற்பு கிடைத்தது, அதிமுகவும் தேர்தலில் வெற்றி பெற்றது.

2016 அதிமுக தேர்தல் அறிக்கை

2016 அதிமுக தேர்தல் அறிக்கை

வரவிருக்கும் சட்டசபை தேர்தலிலும், தேர்தல் அறிக்கை வெற்றிக்கு உதவும் என்பதால், அனைத்து கட்சிகளும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில், ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

ஓ.பி.எஸ் தலைமையில்

ஓ.பி.எஸ் தலைமையில்

அவர்கள் தயாரித்த தேர்தல் அறிக்கையை இறுதி செய்ய, லோக்சபா சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் நிதிஅமைச்சர் பொன்னையன் உட்பட, 14 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், கடந்த சில தினங்களாக ஸ்டார் ஹோட்டலில் கூடி தேர்தல் அறிக்கையை இறுதி செய்தனர்.

மார்ச் 11ல் வெளியீடு

மார்ச் 11ல் வெளியீடு

அடுத்த கட்டமாக முதல்வர், தேர்தல் அறிக்கையை ஆய்வு செய்து, சேர்க்க வேண்டிய பகுதிகளை சேர்க்கவும்,நீக்க வேண்டிய பணிகளை நீக்கவும் செய்வார். வரும், 11ம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில், தேர்தல் அறிக்கையை முதல்வர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

இலவசங்கள் என்ன?

இலவசங்கள் என்ன?

கடந்த முறை மாணவர்களுக்கு மடிக்கணினி அளித்தது போல இம்முறை புதிதாக என்ன அறிவிக்கப்போகிறாரோ என்று பள்ளி மாணவர்களும், இல்லத்தரசிகளும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

தேமுதிக அறிக்கை

தேமுதிக அறிக்கை

கடந்த பிப்ரவரி 21ம் தேதி வேடலில் நடைபெற்ற மாநாட்டில் தேமுதிக மிகப்பெரிய பொருளாதார அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதுவே தேர்தல் அறிக்கை என்றும் கூறப்பட்டது.

அரசியல் கட்சிகள்

அரசியல் கட்சிகள்

தேர்தல் களம் பரபரப்படைந்துள்ள நிலையில் திமுக மக்கள் நலக்கூட்டணி, காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகளும், தேர்தல் அறிக்கை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அக்கட்சிகளும் விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+