சசிகலா விஷம் கொடுத்து கொன்று விடுவார் என்று அஞ்சினார் ஜெயலலிதா: மனோஜ் பாண்டியன்
"சசிகலா உள்ளிட்டோர் எனக்கு விஷம் கொடுத்துவிடுவாரோ என்று பயம் இருந்தது" என்று ஜெயலலிதா எங்களிடம் தெரிவித்தார் என்று அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
சென்னை: முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அதிமுக ராஜ்யசபா எம்.பியான மனோஜ் பாண்டியன். அவர் கூறுகையில்,
ஆட்சியை கலைத்துவிட்டு அதிகாரத்தை பிடிக்க சசிகலாவும் அவரது உறவினரும், திட்டமிட்டதை அறிந்து, ஜெயலலிதா அவர்களை கட்சியிலிருந்து நீக்கினார். அப்போது என்போன்ற விசுவாசிகள் மகிழ்ந்தோம்.

ஆனால் மீண்டும் சசிகலாவை மட்டும் வீட்டுக்குள் வர ஜெயலலிதா அனுமதித்தார். அப்போது நாங்கள் கவலையடைந்தோம். எங்களை பார்த்து "நான் உதவியாளர் தேவை என்பதற்காகவே சசிகலாவை வீட்டுக்கு அழைத்துள்ளேன். எந்த காலத்திலும் இவர்களை அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன். கவலைப்பட வேண்டாம்" என்றார். அப்போதுதான் நாங்கள் நிம்மதியடைந்தோம்.
சசிகலாவை கட்சியை விட்டு விலக்கியபோது, சோ, நான் ஜெயா டிவி நிர்வாகத்தில் பணியமர்த்தப்பட்டோம். அப்போது, "
சசிகலா உள்ளிட்டோர் எனக்கு விஷம் கொடுத்துவிடுவாரோ என்று பயம் இருந்தது" என்று ஜெயலலிதா எங்களிடம் தெரிவித்தார். ஆனால் நாங்களோ, உங்களுக்கு நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என்று உறுதியளித்தோம். இவ்வாறு மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
மேலும், அதிமுக சட்ட விதி 19 (8) கீழ், பொதுக்குழு கொள்கைகள் தொண்டர்களை கட்டுப்படுத்தும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராகதான் நியமிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications