ஆணாதிக்கத்தை தகர்த்து அதிரடியாக சாதித்த "ஆச்சி"... !
சென்னை: திரையுலகம் என்றாலே அப்போது ஆணாதிக்கம் என்ற நிலையில் அதைத் தகர்த்து தனது நடிப்புத் திறமையால் ஒரு பெண்ணாலும் சாதிக்க முடியும், காமெடியில் கலக்க முடியும் என்பதை நிரூபித்து இன்றைய பெண் காமெடியன்களுக்கு ராஜபாட்டையை உருவாக்கிக் கொடுத்த மாபெரும் சாதனைப் பெண் மனோரமா.
கவியரசு கண்ணதாசன் கண்டெடுத்த நல் முத்துதான் மனோரமா. மாலையிட்ட மங்கையில்தான் மனோரமாவை அறிமுகப்படுத்தினார் கண்ணதாசன்.
ஹீரோயினாக அறிமுகப்படுத்திய கையோடு இனியும் நீ ஹீரோயினாக நடிக்க வேண்டாம். இப்படியே நடித்தால் ஒரு கட்டத்தில் உன்னை ஒதுக்கி விடுவார்கள். மாறாக உனக்கு காமெடி நன்றாக வரும். அதில் இறங்கு வரலாறு படைப்பாய் என்று புதிய வழி காட்டினார் கவிஞர்.

புகுந்து புறப்பட்ட புதுப் புயல்
அவரது வார்த்தையை ஏற்று நகைச்சுவைக் களத்தில் புகுந்த மனோரமா, அதன் சந்து பொந்தெல்லாம் புகுந்து புறப்பட்டு புதிய வரலாறு படைத்தார். நாகேஷ், சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, சுருளி ராஜன் என்று காமெடி ஜாம்பவான்கள் கோலோச்சிய நேரம் அது.

அத்தனை பேரையும் ஓவர் டேக் செய்து
ஆனால் அத்தனை பேருக்கும் ஈடு கொடுத்து, இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு நிகராக காமெடியில் சாதனை படைத்தவர் மனோரமா.

நாகேஷ் - மனோரமா
நாகேஷ் - மனோரமா ஜோடி ஒரு படத்தில் இருக்கிறது என்றால் அந்தப் படம் சூப்பர் ஹிட். அப்படி இருவரும் சேர்ந்து போட்டி போட்டு காமெடியில் கலக்கிய படங்கள் ஏராளம், ஏராளம்.. தமிழ் சினிமாவில் சகாப்தமாக திகழ்ந்தது நாகேஷ் மனோரமா ஜோடி என்றால் மிகையில்லை.

கவுண்டமணி - மனோரமா
அதேபோல சந்திரபாபு, தேங்காய், வி.கே.ராமசாமி முதல் பிற்காலத்தில் காமெடியில் கலக்கியவரான கவுண்டமணியுடனும் ஜோடி போட்டு பல அசத்தல் படங்களைக் கொடுத்தவர் மனோரமா.

நடிகைகளாலும் அசத்த முடியும்
காமெடி என்றால் நடிகர்கள்தான் என்று இருந்த நிலையை மாற்றிப் போட்டவர் இந்த மனோரமா. நடிகைகளாலும் அசத்த முடியும் என்பதை நிரூபித்தவர் இவர்தான்.

ஹீரோக்களுக்கு நிகராக
அதை விட முக்கியமாக அக்காலத்தில் புகழ் பெற்ற ஹீரோக்களான எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு இணையாக தனது அசாத்திய நடிப்புத் திறமையால் பெரும் புகழ் பெற்றும் விளங்கினார் மனோரமா. புகழ் பெற்ற ஹீரோயின்களே சற்று பொறாமையுடன் பார்க்கும் அளவுக்கு மனோரமாவின் புகழ் ஓங்கி ஒளிர்ந்தது அப்போது.

சிவாஜியை மிஞ்சிய நடிப்பு
தில்லானா மோகனாம்பாள் படத்தில் இவர் சிவாஜி கணேசனையே மிஞ்சியிருப்பார் பல இடங்களில். அப்படி ஒரு அபாரமான நடிப்பைக் கொடுத்து புயல் போல அந்தப் படத்தில் கலக்கியிருப்பார்.

காமெடி ராணி
ஆணாதிக்க திரையலகில் தனக்கென ஒரு தனிப் பாதை அமைத்துக் கொண்டு கடைசி வரை ராணியாக வலம் வந்தவர் மனோரமா என்றால் அதற்கு மறுமொழி கிடையாது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications