முடிந்தால் திரும்பி வந்துடுங்க மனோரமா ஆச்சி: ட்விட்டரில் ரசிகர்கள் கண்ணீர்
சென்னை: ஆச்சி மனோரமா இறந்த செய்தி கேட்டு ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருவதால் #Manorama என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
5 மொழிகளில் ஆயிரத்து 500 படங்களில் நடித்துள்ள மனோரமாவை அனைவரும் அன்புடன் ஆச்சி என்று அழைத்து வந்தனர். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சனிக்கிழமை இரவு மரணம் அடைந்தார்.
இந்நிலையில் ரசிகர்கள் அவரின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதனால் ட்விட்டரில் #Manorama என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
|
ஜாம்பவான்
ஆணாதிக்கம் உள்ள துறையில் ஆச்சி ஒரு ஜாம்பவானாக இருந்தார். அவரது நகைச்சுவை, பாடி லாங்குவேஜ் அவர் சிறந்த நடிகை. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் #Manorama என சதிஷ் குமார் ட்வீட் செய்துள்ளார்.
|
லேடி சிவாஜி
லேடி சிவாஜி ஆச்சி மனோரமா அம்மா 78வது வயதில் மரணம் அடைந்தார். திரையுலகை 50 ஆண்டுகள் ஆண்ட அவர் 5 முதல்வர்கள், 5 தலைமுறை நடிகர்கள், 1500 படங்கள், 1000 மேடைகள், கின்னஸ் சாதனை படைத்தவர். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என நந்தா தெரிவித்துள்ளார்.
|
ஆச்சி
#Manorama தென்னிந்திய மக்கள் அனைவருக்கும் ஆச்சியாக இருந்தவர். எங்கள் இதயங்களில் என்னென்றும் வாழ்வீர்கள் என சீனு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
முதல்வர்கள்
அறிஞர் அண்ணா, ராமராவ், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெ உள்ளிட்ட ஐந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை #Manorama ஆச்சி மட்டுமே என கோவிகண்ணன் ட்வீட் செய்துள்ளார்.
|
மனோரமா
மனோரமாவின் ஆத்மா சாந்தியடையட்டும். 1200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அருமையான காமெடி டைமிங், சிறந்த பாடகி. முடிந்தால் திரும்பி வந்துவிடுங்கள் ஆச்சி என்று ஆர்பின் ஜகரியாஸ் கூறியுள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications