5 மாநில சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தும் புது முயற்சிகள்
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலின்போது, புதிய பல முயற்சிகளை செய்து பார்க்க உள்ளது மத்திய தேர்தல் ஆணையம்.
இன்று மதியம் 3 மணிக்கு டெல்லியில், செய்தியாளர்களை சந்தித்தார், தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி. அப்போது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநில சட்டசபைக்கு மே 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில தேர்தல் முடிவுகளும் மே 19ம் தேதி வெளியாக உள்ளதாக அவர் கூறினார்.
இத்தேர்தலில் பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து ஜைதி கூறியாதவது:
*தொழுநோய் சிகிச்சை மையங்களில் சிறப்பு வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும்
* வாக்குப்பதிவு இயந்திரங்களில், சின்னங்களோடு சேர்த்து, போட்டியிடுவோர் போட்டோவும் ஒட்டப்படும். இதனால் வாக்காளர்களுக்கு நிலவும் பெயர் குழப்பம் தவிர்க்கப்பட்டு, விரும்பியவர்களின் சின்னத்தில் சரியாக ஓட்டு போட முடியும்.
*மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் வாக்குப்பதிவின்போது, மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.
*ஒவ்வொரு மாவட்டத்திலும், 5 மத்திய கண்காணிப்பாளர்கள் இருப்பார்கள். கிரிமினல் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிப்பார்கள்.
*பெண்களுக்காக பிரத்யேக 'மகளிர் மட்டும்' வாக்குச்சாவடிகள் ஐந்து மாநிலங்களிலும் அமைக்கப்படும்.
*தேர்தல் பணியாற்றும் அலுவலர்களின் உறவினர்கள் யாரேனும், தேர்தலில் போட்டியிடுகிறார்களா என்பது குறித்து விசாரிக்கப்படும்.
*நோட்டாவுக்கு, தனி சின்னம் ஒதுக்கப்படுகிறது.
*பண பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்புப் படைகளுடன் மத்திய பாதுகாப்புப் படை செல்லும். கண்காணிப்புப் படைகளின் வாகனங்களில் ஜிபிஎஸ் பொறுத்தப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications