செங்கம்.. பட்டாசு குடோனில் பெரும் தீவிபத்து - 2 பேர் பலி?
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் இன்று பட்டாசு கிட்டங்கி ஒன்றில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பலர் படுகாயமடைந்தனர்.
செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசு கிட்டங்கி ஒன்று உள்ளது. இங்கு இன்று மதியம், தீவிபத்து ஏற்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின.
வெடிச் சத்தத்தில் அருகில் இருந்த பல கட்டடங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. விபத்தில் உள்ளே இருந்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உயிரிழப்பு குறித்து தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீபாவளி சமயம் என்பதால் தமிழகத்தில் பல இடங்களில் பட்டாசுத் தயாரிப்பு மும்முரமாக உள்ளது. இதில் சிவகாசி மற்றும் விருதுநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் நகரில் இந்த பட்டாசு ஆலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட பட்டாசு கிட்டங்கி முறையான அனுமதியுடன் இயங்கியதா அல்லது சட்ட விரோதமானதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications