கூலி வேலை பார்க்கும் மறைமலை அடிகளாரின் பேரன்..!
சென்னை: தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் வாரிசு கட்டட வேலை செய்து வருவதாகவும், அரசுப் பணி வழங்க வேண்டும் எனவும் முதல்வரின் தனிப் பிரிவில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவில் மறைந்த தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் மகன் மறை பச்சையப்பன் அளித்துள்ள மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
"சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் வசிக்கிறேன். மறைமலை அடிகளின் மூன்றாவது மனைவி கண்ணம்மாளுக்குப் பிறந்தவர். தந்தையின் மறைவுக்குப் பிறகு குடும்பம் நிர்க்கதியாகிவிட்டது.
பல ஆண்டுகளாக பசியிலும் பட்டினியிலும் குடும்பம் வாடுகிறது. எனது மனைவி காந்திமதி. வயதான எங்களால் வேலை எதுவும் செய்ய முடியவில்லை. கட்டட வேலைக்கு சென்றதில் கால் முறிந்துவிட்டது.
எங்களது 28 வயதான மகன் சிவகுமார் கூலி வேலைக்குச் செல்கிறார். அவரது சொற்ப சம்பளத்தில் வாழ்கிறோம். மறைமலை அடிகளாரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டதில் கிடைத்த ரூபாய் 30 லட்சத்தை 11 வாரிசுதாரர்களுக்கு பிரித்ததில் எனக்கு ரூபாய் 2.70 லட்சம் கிடைத்தது.
அதை வைத்து மகள் திருமணத்தை முடித்தேன். தற்போது கஷ்டத்தில் இருக்கிறேன். எனது மகனுக்கு அரசுப் பணிவேண்டி பல ஆண்டுகளாக முயற்சிக்கிறேன். எனது மகனுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்" என்று மனுவில் அவர் கூறியுள்ளார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications