அந்த பக்கம் அவர்.. இந்த பக்கம் இவர்.. பேரணிக்காக அழகிரி வாங்கி கொடுத்த ஸ்பெஷல் கருப்பு டீ-சர்ட்!
மு.க அழகிரி நடத்தும் பேரணிக்கு வந்து இருக்கும் அவரது தொண்டர்கள் வித்தியாசமான கருப்பு நிற டீ-சர்ட் அணிந்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: மு.க அழகிரி நடத்தும் பேரணிக்கு வந்து இருக்கும் அவரது தொண்டர்கள் வித்தியாசமான கருப்பு நிற டீ-சர்ட் அணிந்து இருக்கிறார்கள்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி நோக்கி மு.க அழகிரி நடத்தும் பேரணிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக். இதனால் திமுகவில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி மு.க அழகிரி தலைமையில் இன்று அமைதி பேரணி நடத்தப்பட உள்ளது. இன்று காலை 11 மணி அளவில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
|
பெரிய கொண்டாட்டம்
இந்த அமைதி பேரணி உண்மையில் அத்தனை அமைதியாக நடக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். ஆம்சென்னையில் உள்ள பறை இசை கலைஞர், பேண்ட் வாத்தியக்காரர்கள் இந்த பேரணியில் வாசிக்க வரவழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மதுரையில் இருந்தும் ஆட்கள் இறக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு டீ சர்ட்
அதேபோல் சென்னையில் உள்ள பெரும்பாலான அழகிரி விசுவாசிகள் எல்லோரும் ஒரே நிற டீ சர்ட் மட்டுமே அணிந்து இருக்கிறார்கள். எல்லோருக்கும் கருப்பு நிற டீ சர்ட் வாங்கி தரப்பட்டுள்ளது. அதில் முன்பக்கம் பெரிதாக அழகிரி புகைப்படம், சிறிதாக கருணாநிதி புகைப்படம் உள்ளது. பின்பக்கம் தயாநிதி அழகிரி புகைப்படம் உள்ளது.

ஸ்டாலினை காணோம்
அதேபோல் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது எங்குமே இவர்கள் மூவர் புகைப்படத்தை தவிர வேறு புகைப்படங்கள் பயன்படுத்தப்படவில்லை. அழகிரி, கருணாநிதி, தயாநிதி அழகிரி ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். அறிஞர் அண்ணா, பெரியார் புகைப்படம் கூட இல்லை.

பஸ்
ஒரு நாளைக்கு 10 டிரெயின் வருது, நான் ஆள் இறக்கி காட்டட்டுமா என்று சிங்கம் படத்தில் சூர்யா சொல்வது போல அழகிரி ஆள் இறக்கி வைத்துள்ளார். ஆம் ரயிலுக்கு பதிலாக, பேருந்துகளில் நேரடியாக ஆட்களை இறக்கி உள்ளார். தென்மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் ஆட்கள் குவிந்து இருக்கிறார்கள்.
-
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications