அ.தி.மு.க. எம்.பி. குமார் மிரட்டியதாக மரியம் பிச்சையின் 3வது மனைவி புகார்- திருச்சியில் பரபரப்பு!
திருச்சி: திருச்சி அதிமுக எம்.பி., குமார் தன்னுடைய சொத்துக்களை கைப்பற்ற முயற்சி செய்வதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மனைவி கஸ்தூரி புகார் அளித்துள்ளார்.
2011 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவைத் தோற்கடித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவினால் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆக்கப்பட்டவர் மரியம் பிச்சை. ஆனால் அக்டோபரில் ஒரு சாலை விபத்தில் அவர் இறந்து விட்டார். அப்பொழுது, மரியம் பிச்சையின் மனைவிகளைப் பார்த்து ஜெயலலிதா ஆறுதல் கூறினார். மரியம் பிச்சைக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இவரது மூன்றாவது மனைவி பெயர் கஸ்தூரி.

திருச்சியைச் சேர்ந்த அதிமுகவினர் அடிக்கடி புகாருக்கு ஆளாகி வருகின்றனர். பெண்கள் விசயத்தில் வசமாக சிக்கிய பரஞ்சோதி வழக்குகளை சந்தித்து வருகிறார். அதேபோல மரியம் பிச்சையின் மகன் ஆசிக் மீராவும் பெண்மோசடி புகாரில் சிக்கி நீதிமன்ற படியேறி வருகிறார். இந்த நிலையில் அதிமுக எம்.பி., குமார் மீது மரியம் பிச்சையின் மனைவி கஸ்தூரி, புகார் அளித்துள்ளார்.
தனக்கு சொந்தமான கலையரங்கம் மற்றும் தியேட்டரை குமார் கைப்பற்ற முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார் கஸ்தூரி. குமாரின் மிரட்டலின் பேரிலேயே தனது தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். குமாரின் நெருக்கடி காரணமாக தியேட்டருக்கான வருடாந்திர அனுமதி பெற முடியாமல் சிக்கலில் தவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications