50 மில்லியன் மக்களின் தகவலை திருடிய பேஸ்புக்.. கைதாகிறார் மார்க் ஜூக்கர்பெர்க்?
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன மோசடி பெரிதாகி வருவதை அடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன மோசடி பெரிதாகி வருவதை அடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரஷ்யா
அமெரிக்க தேர்தலில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று 1 வருடம் முன்பே சர்ச்சை உருவானது. ரஷ்யாதான் அதிபர் டிரம்ப்பின் வெற்றிக்கு பின் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ரஷ்யா, பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் மூன்றும் இணைந்து மக்களின் தகவல்களை திருடி தேர்தல் முடிவுகளை மாற்றி உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் சம்மன்
இந்த நிலையில் அமெரிக்காவில் எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சிலர் மார்க் ஜூக்கர்பெர்க் மீது வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். முதற்கட்டமாக இதில் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி உள்ளார்கள். இவ்வளவு நாள் அமெரிக்க தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை என்று பொய் சொல்லியது ஏன் என்றுள்ளார்கள்.

சோதனை
அமெரிக்காவில் மட்டுமில்லாமல் பிரிட்டனிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கிறது. பிரிட்டன் தகவல் தொடர்பு ஆணையர் எலிசபெத் டென்ஹாம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு எதிராக வாரண்ட் வாங்கியுள்ளார். அதன்படி இன்றும் நாளையும் பேஸ்புக் தலைமையகம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன தலைமையகம் இரண்டிலும் சோதனை நடத்தப்பட இருக்கிறது.

கைது செய்யப்படலாம்
இந்த சோதனையின் முடிவில் பேஸ்புக் நிறுவனர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் இந்த கைது சம்பவம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இது உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், மற்ற நாடுகள் கைது நடவடிக்கையில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications