மணமகனுக்கு வலிப்பு.. கட்டிய தாலியை கழற்றித் தந்துவிட்டு சென்ற மணமகள்
நாமக்கல்: திருமண மேடையில் தாலி கட்டிய அடுத்த சில நிமிடங்களில் மணமகனுக்கு வலிப்பு வந்ததால், மணமகள், தாலியைக் கழற்றிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார். இதனால் திருமண மண்டபே அதிர்ச்சியானது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராபாளையம் பகுதியைச் சேர்ந்த ராணி என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது.
இவர்கள் இருவரின் திருமணத்மையும் கருமலை முருகன் கோவில் என்ற கோவிலில் நடத்த தீர்மானித்து அங்கு நேற்று காலை திருமணமும் நல்லபடியாக முடிந்தது.
முகூர்த்த நேரத்தில், தாலி கட்ட மணமகன் தாலியை எடுத்து மணமகள் கழுத்தை நெருங்கியபோது அவருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. இதனால் அவருக்கு வாயில் நுரையும், ரத்தமும் வெளி வந்தது. இருந்தும் அருகில் இருந்த மணமகனின் உறவினர்கள் சேர்ந்து கையைப் பிடித்து தாலி கட்ட உதவியுள்ளனர். மாப்பிள்ளையும் தாலி கட்டி முடித்தார்.
ஆனால் மணமகள் குடும்பத்தால் அதிர்ச்சி அடைந்தனர். மணமகனுக்கு வலிப்பு நோய் உள்ளதை சொல்லாமல் மறைத்து விட்டதாக சண்டைக்கு வந்தனர். மேலும், மணமகள் கழுத்தில் கட்டப்பட்ட தாலியையும் அவர்களே அவிழ்த்து அதை மணமகன் வீட்டாரிடம் கொடுத்து விட்டனர். இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் மூண்டது.
போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மணமகள் வீட்டார் தங்களது முடிவில் உறுதியாக இருந்து விட்டதால் மணமகன் வீட்டார் வாங்கிய சீர்வரிசைகளை அப்டியே திருப்பிக் கொடுத்தனர். மணமகள் வீட்டார் பின்னர் கிளம்பிச் சென்று விட்டனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications