முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவு.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: லோக்சபாவின் முன்னாள் சபாநாயகரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை லோக்சபாவில் சபாநாயகராக இருந்தார். பின்னர், கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், 89 வயதான சோம்நாத் சாட்டர்ஜி உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை கொல்கத்தா மருத்துவமனையில் காலமானார்.

சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு, தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "சிறந்த நாடாளுமன்றவாதியும், 10 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி அவர்களது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
சோம்நாத் சாட்டர்ஜி சிறந்த வழக்கறிஞராகவும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளையும் பாதுகாக்கும் போராட்டங்களில் பெரும் பங்காற்றியவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும், சபாநாயகராகவும் பணியாற்றிய போது முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
அவரது மறைவால் வாடும் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது" என்று இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications