இவர் யார் என்று தெரிகிறதா... ?
சென்னை: மசாபா குப்தா.. யார் என்று தெரிகிறதா.. விவியன் ரிச்சர்ட்ஸுக்கும், நீனா குப்தாவுக்கும் பிறந்த மகள். இப்போது இவர் ஒரு புகழ் பெற்ற பேஷன் டிசைனர். தனித்துவம் கொண்ட பெண்ணாக தனது துறையில் மிளிர்கிறார்.
தந்தையின் பெயரையும், தாயின் பெயரையும் பயன்படுத்தாமல் தனது திறமையை முன்வைத்து தனது துறையில் சத்தமில்லாமல் சாதித்து வருபவர் மஸாபா.
கடந்த மாதம்தான் இவரது திருமணம் நடந்தேறியது. பாலிவுட்டில் நிறையப் பேருக்கு இவர் நல்ல தோழியாக விளங்கி வருபவர். பல பிரபலங்களுக்கு டிரஸ் வடிவமைப்பாளர் இவர்தான்.

26 வயதில் இமயம் தொடும் சாதனை
26 வயதுதான் ஆகிறது மசாபாவுக்கு. அதற்குள் பேஷன் டிசைனிங்கில் தனக்கென தனி முத்திரையுடன் வலம் வருகிறார் மசாபா. இந்திய பேஷன் துறையில் தவிர்க்க முடியாத நபராகவும் மாறி நிற்கிறார்.

தற்செயலாக வந்த துறை
ஆனால் மசாபா இதை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. எல்லாம் தற்செயலாக நடந்தது. 19 வயதில் அவர் புகைப்படக் கலைஞராக விரும்பி அதை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோதுதான் தெரியாத்தனமாக பேஷன் டிசைனிங்கில் வந்து விழுந்து விட்டார். பிறகு இதுவே வாழ்க்கையாகிப் போனது அவருக்கு.

பாக்கெட் வச்ச சேலை
டிசைனிங்கில் செமயான விஷயங்களைச் செய்த பெருமைக்குரியவர் மசாபா. அதாவது சேலையில் பாக்கெட் டிசைன் வைத்து அசத்தியவர் இவர். அந்தக் காலத்தில் சுருக்குப் பை வைத்திருப்பார்கள் நம்ம பாட்டிகள். அதே ஸ்டைல்தான் இதுவும்.

விக்கிறது கஷ்டமாச்சே
டிசைன் டிசைனாக ஆடைகளை வடிவமைத்து எளிதாக விற்கலாம் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் அப்படி அல்ல. நமது டிசைன் வெற்றி பெற நாம் கடுமையாக மெனக்கெட வேண்டும் என்று சொல்கிறார் மசாபா.

பெர்சனல் டிரஸ் மேக்கர்
பாலிவுட்டில் பிரபலங்களான ஆலியா பட், சோனம் கபூர், கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மந்திரா பேடி என பலருக்கும் இவர் டிரஸ் டிசைனராக இருக்கிறார்.

திருமண பந்தத்தில்
தற்போது குடும்பமும், குடித்தனமுமாக இல்லத் தலைவியாகவும் மாறியுள்ளார் மசாபா. தனது காதலரும், தயாரிப்பாளருமான மது மன்டேனாவுடன் கடந்த ஜூன் மாதம்தான் திருமணம் முடிந்தது மசாபாவுக்கு.

மறைக்காமல் அங்கீகரித்த ரிச்சர்ட்ஸ்
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவானாக இருந்தபோது நீனாவை காதலித்து மணந்தார் ரிச்சர்ட்ஸ். இந்தத் திருமணத்தையும், நீனா தனது மனைவி என்பதையும் அவர் மறைத்ததில்லை. அதேபோல மசாபா மீதும் அன்பு வைத்திருப்பவர்.
தற்போது தனது தந்தையைக் காண கணவருடன் போயுள்ளாராம் மசாபா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications