ஆயிரம் தலை வாங்கிய.. தொப்பூர் கணவாய்.. வருகிறது விடிவுகாலம்.. ரெடியாகும் பிரம்மாண்ட தீர்வு!
தருமபுரி: தொப்பூர் கணவாயில் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக அமைக்கப்படும் உயர்மட்ட சாலையின் பணிகள் 50 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளன. அங்கே விபத்துகளை தவிர்க்க 6.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அங்கே உயர் மட்ட சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 905 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை 47ல் உள்ளது தொப்பூர் கணவாய். சாய்வான சாலையை கொண்ட இந்த பகுதி இரண்டு பக்கமும் மரங்கள், மலைகள் சூழ்ந்த அழகிய பகுதியாகும். ஆனால் ஆபத்தும் அதிகம்! அடுத்தடுத்த திருப்பங்கள், கடினமான வளைவுகள் காரணமாக இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் தொம்பரகாம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து தொப்பூர் வரை உள்ள சாலைதான் அதிகம் விபத்து ஏற்படும் சாலை ஆகும்.

தொப்பூர் கணவாய்.
தொப்பூர் கணவாயில் 2018ல் மட்டும் 92 விபத்துகள் ஏற்பட்டன. 2019ல் 108 விபத்துகள் ஏற்பட்டன.. அதேபோல் 2020ல் 99 விபத்துகள் ஏற்பட்டன, இதில் 2018ல் 32 பேரும், 2019ல் 46 பேரும், 2020ல் 38 பேரும் பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறையின் புள்ளி விவரங்களின்படி இங்கு 11 ஆண்டில் 961 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட விபத்துகள். கணக்கில் எடுக்கப்படாத சிறிய விபத்துகளும் உள்ளன.
கடந்த 12 ஆண்டுகளில் தொப்பூர் கணவாயில் ஏற்பட்ட விபத்துகளில் 255 பேர் பலியாகி உள்ளனர். சாய்வான சாலை, குறுகலான திருப்பங்கள் ஆகியவை இங்கு விபத்து ஏற்பட முக்கிய காரணம் ஆகும். அதேபோல் இங்கு டோல் கேட்டில் சமயங்களில் அதிக வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். அப்போது பின்னாடி வரும் வாகனங்கள் இதை கவனிக்காமல் வேகமாக வந்து மோதும் வழக்கம் உள்ளது. 2020ல் ஏற்பட்ட மிக நீண்ட தொப்பூர் விபத்துக்கு இந்த போக்குவரத்து நெரிசலும் முக்கிய காரணம் ஆகும்.
தொப்பூர் கணவாய்: விபத்து உண்மையான காரணம்
பெங்களூரில் இருந்து தமிழ்நாடு உள்ளே வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக சாலையின் உயரம் குறையும். இந்த பகுதியில் சாலை எதிர்பார்க்காத அளவிற்கு சரிவாக இருக்கும். சாலையில் சாதாரணமாக செல்லும் போது அதை உணர முடியாது. ஆனால் புவியியல் அடிப்படையில் பார்த்தால் நாம் மலையில் இருந்து சரிவாக வாகனத்தை ஓட்டி இறக்குவதுபோல் இறக்க வேண்டும்.
இதில் கார்கள் எளிதாக இறங்கிவிடும். காரணம் அதன் பிரேக். ஆனால் லாரிகளில் இருப்பது ஏர் பிரேக். அவை பிரஷர் வைத்து இயங்குபவை. இங்கே லாரியை வேகமாக இயக்கினால் அது கட்டுப்பாட்டை இழந்து சரியான ரோடு என்பதால் விபத்து ஏற்படும். அதுவே.. லாரியை பிரேக் பிடித்தபடியே மெதுவாக இயக்கினாலும் பிரேக் பிரஷர் குறைந்து குறைந்து பிரேக் பெயிலியர் ஆகிவிடும்.
லாரிகளில் உள்ளே ஏர் பிரேக் பெயிலியர் ஆவதே இங்கே நடந்த 90 சதவிகித விபத்துகளுக்கு காரணம் என்கிறார்கள் அங்கே உள்ள லாரி ஓட்டுனர்கள்.
Status of the 775 Crs Thoppur Ghat Realignment project on Salem-Dharmapuri-Bengaluru National Highway (NH-44) to improve its alignment and address the issue of frequent accidents... #TN #Infra
— Chennai Updates (@UpdatesChennai) August 25, 2025
Thanks to @poomaniinfo 🙌 pic.twitter.com/gS8SVrIo6w
தொப்பூர் கணவாய் விபத்து: பிரச்சனைக்கு தீர்வு
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொப்பூர் கணவாயில் அதிக அளவில் ஸ்பீட் பிரேக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் வளைவுகளில் மெதுவாக செல்லும்படி ஸ்பீக்கர்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இங்கு 30 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல கூடாது என்று தொடர்ந்து இந்த ஸ்பீக்கரில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த வருடம் விபத்துகள் 23 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கே elevated சாலை எனப்படும் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இங்கே தற்போது உயர்த்தப்பட்ட சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications