ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் டா... மேத்யூ ஹைடனின் சிங்கம் டுவீட்
திருநெல்வேலி: மதுரையில் வேஷ்டி சட்டையில் மீனாட்சி அம்மனை தரிசித்த மேத்யூ ஹைடன் திருநெல்வேலிக்கு சென்று இருட்டுக்கடை அல்வாவை ருசித்திருக்கிறார்.
நெல்லை செல்லும் வழியில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் காட்சி படமாக்கப்பட்ட சாலை ஒன்றில் நின்று போட்டோ எடுத்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் "ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட் டா" என கமெண்ட் செய்து பகிர்ந்துள்ளார்
அம்பாசமுத்திரம் அருகே தனியார் பள்ளியில் கிரிக்கெட் வலைப்பயிற்சி தளத்தை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மெத்யூ ஹைடன் திறந்து வைத்தார்.

கிரிக்கெட் விழிப்புணர்வு
மாணவர்கள் மத்தியில் கிரிக்கெட் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் மதுரை நகருக்கு சென்ற அவர் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையுடன் வந்திருந்து பிரமாதப்படுத்தியிருந்தார்.
|
மேத்யூ ஹைடன்
இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராக பரவி வருகின்றது. இந்நிலையில், இன்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கிரிக்கெட் வலைதளப்பயிற்சி தளத்தை ஹைடன் தொடங்கி வைத்தார். பள்ளிக்கு வந்த ஹைடனுக்கு பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
|
சிங்கம் வசனம்
இதனைத் தொடர்ந்து நெல்லை செல்லும் வழியில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் காட்சி படமாக்கப்பட்ட சாலையில் நின்று போட்டோ எடுத்து அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் "ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட் டா" என கமெண்ட் செய்து பகிர்ந்துள்ளார் ஹைடன். இதுவும் சமூக வலைத்தங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
|
இருட்டுக்கடை அல்வா
வேஷ்டி சட்டை அணிந்து வலம் வரும் ஹைடன் கழுத்தில் சந்தனமாலையுடன் கையில் பிரம்மாண்ட கரண்டி பிடித்து அல்வா கிண்டும் காட்சியையும் போட்டோ எடுத்து அதனை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications