சென்னையில் மே 17 இயக்கம் சார்பில் பிப்.18-ல் வெல்லும் தமிழீழம் மாநாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மே 17 இயக்கத்தின் சார்பில் சென்னையில் வரும் 18-ந் தேதி வெல்லும் தமிழீழம் எனும் தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வெல்லும் தமிழீழம்" தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டினை பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

May 17 movement to hold Eelam conference in Chennai

ஒன்றரை லட்சம் தமிழர்களின் இனப்படுகொலை என்பது 9 ஆண்டுகளில் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. ஈழ இனப்படுகொலை குறித்த விவாதங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த மோசமான இனப்படுகொலையை இத்தனை சாதாரணமாக நாம் கடந்து விட முடியாது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழர்கள் நாம் எழுந்து நின்று குரல் கொடுத்தாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தூர்தர்சன் அருகே உள்ள அண்ணா கலையரங்கத்தில் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை முழுநாள் மாநாடாக நடைபெற உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
May 17 Movement will hold the Eelam Confernece on Feb 18 in Chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற