ம.க.ஸ்டாலின் தோல்வி! மயிலாடுதுறை லோக்சபா தொகுதியை அடித்து தூக்கிய வக்கீல் சுதா! காளியம்மாள் 4ம் இடம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், வெற்றி வாகை சூடியுள்ளார் வக்கீல் சுதா. தற்போதைய சூழலில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர். சுதா, பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக ம.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் பாபு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் காளியம்மாள் ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் ஆர்.சுதா வென்றுள்ளார். சுதா 5,18,459 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பாபு 2,47,276 வாக்குகளும்
பாமகவின் ம.க.ஸ்டாலின் 1,66,437 வாக்குகளும், நாதக வேட்பாளர் காளியம்மாள் 1,27,642 வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம்: 2,71,183
வெல்லப்போவது யார்?: காங்கிரஸ் வேட்பாளர் சுதாவுக்கு, கட்சி செல்வாக்கு மட்டுமின்றி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பலமும், தீவிர பிரச்சாரமும் சாதகமாக உள்ளன. கடந்த தேர்தலில் திமுக vs அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது இங்கு திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், பாஜகவின் கூட்டணி கட்சியான பாமக, அதிமுக நேரடியாக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவியது.
மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி மசூடம் சூடுமா? அதிமுக வெற்றி பெறுமா? பாஜக ஆதரவுடன் பாமக கடும் போட்டியைக் கொடுக்குமா? காளியம்மாள் கரையேறுவாரா? என்ற கேள்விகளுக்கான விடை கிடைத்துவிட்டது. காங்கிரஸ் சுதா வென்றுள்ளார்.
மயிலாடுதுறை லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 15,45,568
ஆண் வாக்காளர்கள்: 7,56,846
பெண் வாக்காளர்கள்: 8,01,896
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 69
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் - 10,83,243
பதிவான வாக்கு சதவீதம் - 70.09 %
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கி உள்ளன. இதில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 6 தொகுதிகளையும் கைப்பற்றியது.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
இதுவரை நடந்த தேர்தல்களில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 11 முறையும், திமுக 3 முறையும், அதிமுக 2 முறையும் இதுவரை வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சியின் மணி சங்கர் ஐயர் 3 முறை எம்.பியாக இருந்துள்ளார். 1967, 1971 ஆகிய தேர்தல்களில் திமுக வென்றது. ஆனால், கடந்த 1984, 1989, 1991 ஆகிய மூன்று மக்களவைத் தேர்தல்களில் மயிலாடுதுறையில் போட்டியிட்ட திமுக தோல்வி அடைந்தது.
அதன் பின்பு தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே மயிலாடுதுறை தொகுதியை திமுக ஒதுக்கி வந்த நிலையில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பிறகு 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமலிங்கம் வெற்றி பெற்றார். இந்த முறை, கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே மீண்டும் மயிலாடுதுறை தொகுதியை கொடுத்துள்ளது திமுக.
2019 மயிலாடுதுறை மக்களவைத் தேர்தல் முடிவுகள்:
ராமலிங்கம் (திமுக) - 5,99,292
ஆசைமணி (அதிமுக) - 3,37,978
செந்தமிழன் (அமமுக) - 69,030
சுபாஷினி (நாதக) - 41,056
வெற்றி வித்தியாசம் - 2,61,314
2014 மயிலாடுதுறை மக்களவைத் தேர்தல் முடிவுகள்:
பாரதி மோகன் (அதிமுக) - 5,13,729
ஹௌதர் அலி (மனிதநேய மக்கள் கட்சி) - 2,36,679
அகோரம் (பாமக) - 1,44,085
மணி சங்கர் ஐயர் (காங்கிரஸ்) - 58,465
வெற்றி வாக்கு வித்தியாசம் - 2,77,050
2009 மயிலாடுதுறை மக்களவைத் தேர்தல் முடிவுகள்:
ஓ.எஸ். மணியன் (அதிமுக) - 3,64,089
மணி சங்கர் ஐயர் (காங்கிரஸ்) - 3,27,235
கே பாண்டியன் (தேமுதிக) - 44,754
வெற்றி வித்தியாசம் - 36,854
2004 மயிலாடுதுறை மக்களவைத் தேர்தல் முடிவுகள்:
மணி சங்கர் ஐயர் (காங்கிரஸ்) - 411,160
ஓ.எஸ். மணியன் (அதிமுக) - 2,15,469
வெற்றி வாக்கு வித்தியாசம் - 1,95,691
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications