இவரை பற்றி துப்பு தந்தால் பரிசு.. மயிலாடுதுறை விஸ்வநாதர் கோயில் செக்யூரிட்டி கொலை.. போலீஸ் அதிரடி
மயிலாடுதுறை கோயில் கொலை வழக்கு குறித்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்
மயிலாடுதுறை: கோயிலில் கொள்ளை அடிக்க வந்து, அங்கிருந்த பாதுகாவலரையும் கொலை செய்துவிட்டு தப்பிய மர்மநபர் எங்கே தலைமறைவாக இருக்கிறார் என்றே தெரியவில்லை.. இதையடுத்து அந்த கொலையாளி பற்றி துப்பு தந்தால் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை போலீசார் அறிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில், இந்து சமய அறநிலை சொந்தமான விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் உள்ளது.
இந்தக் கோவிலில் இரவு நேர பாதுகாவலராக சாமிநாதன் என்பவர் வேலை பார்த்தார்.. அவருக்கு 55 வயதாகிறது.. கோயிலிலேயே தங்கி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்தார்..

ஏமாற்றம்
இந்த நிலையில் கடந்த மே மாதம் 9ம் தேதி மர்ம நபர் ஒருவர் கோயிலில் சுவரேறி குதித்து, கடுமையாக சாமிநாதனை தாக்கி உள்ளார்.. அத்துடன், கோவில் சன்னதி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவையும், சில்வர் உண்டியலையும் உடைத்துள்ளார்.. ஆனால், அந்த உண்டியலில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வழக்கு
இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கையிலெடுத்தனர்.. உயிருக்கு போராடி கொண்டிருந்த சாமிநாதனை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்.. சாமிநாதனை மர்ம நபர் தாக்கிவிட்டு தப்பும் காட்சி கேமராவில் பதிவாகி இருந்தது.. இதனிடையே சிகிச்சை பலனின்றி சாமிநாதன் மே 14-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தலைமறைவு
எனவே, இந்த வழக்கை கொலை வழக்காக மயிலாடுதுறை போலீசார் பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேட ஆரம்பித்தனர்.. ஆனால் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.. கொலை நடந்து 6 மாதம் ஆகியும் குற்றவாளி சிக்காததாலும், எந்தவித துப்பும் கிடைக்காததாலும், அந்த கொள்ளையன் பற்றி எந்த விவரமும் தெரியாததாலும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

ரொக்கப்பரிசு
அதன்படி, மயிலாடுதுறை கோயில் கொள்ளை வழக்கில் தகவல் தருபவர்களுக்கு ரூ.10000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை போலீஸார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.. இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளரை 8778347770 என்ற எண்ணிலும், மயிலாடுதுறை காவல் ஆய்வாளரை 9442003309 என்ற எண்ணிலும், காவல் உதவி ஆய்வாளரை 9498164710 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க மயிலாடுதுறை போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications