For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் ரேங்க் லிஸ்ட் வெளியீடு... சுந்தரமகேஷ் முதலிடம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப்பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

அரசு மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

தரவரிசை பட்டியல் வெளியீடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு 27907 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.

முதலிடம் சுந்தரமகேஷ்

தரவரிசைப் பட்டியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்த 132 பேரில், மாணவர் சுந்தரமகேஷ் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல், தரவரிசைப் பட்டியலில் 2 ஆம் இடத்தை அபிஷேக், 3 ஆம் இடத்தை விஜயராம் பிடித்துள்ளனர்.

18ல் கவுன்சிலிங்

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வரும் 17 ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலாந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 18 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

English summary
Health Minister Vijayabaskar today releaed MBBS, BDS rank list. The cut-off marks for students aspiring to study MBBS/BDS courses in Government Medical Colleges this year, culled from the XII standard results alone, were announced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X