மனசாட்சிப்படி ஸ்ரீரங்கத்தில் தமாகாவினர் வாக்களிப்பார்கள்- ஜி.கே.வாசன்
ஆரணி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தங்களது மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஆரணிக்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்.

கேள்வி: வருகிற 2016 சட்டசபைத் தேர்தலில் த.மா.கா. யாருடன் கூட்டணி அமைக்கும்?
பதில்: த.மா.கா. சார்பாக தீவிரமாக உறுப்பினர் சேர்க்கை பணி நடந்து வருகிறது. இதுவரை 32 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எங்கள் இலக்கு 50 லட்சம் உறுப்பினர்கள். அனைத்து தரப்பினருமே த.மா.கா.வை வரவேற்கிறார்கள். மத்தியில் மத நல்லிணக்க நல்லாட்சி அமைய வேண்டும். அதற்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி செயல்பட வேண்டும்.
கேள்வி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?
பதில்: எங்கள் கருத்தை ஏற்கனவே பத்திரிகை வாயிலாக தெளிவுபடுத்தி விட்டோம். த.மா.கா. உறுப்பினர்கள் உண்மை நிலை அறிந்து, அவர்களுடைய மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள்.
கேள்வி: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அவரை த.மா.கா.வில் இணைப்பீர்களா?
பதில்: காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக தெரிகிறது. நாங்கள் த.மா.கா. கட்சி வலுப்பெறும் வகையில் செயல்பாடுகளை கொண்டு செல்கிறோம். மற்றொருவரின் கருத்துக்கு பதில் சொல்ல அவசியமில்லை.
கேள்வி: தமிழக அரசின் செயல்பாடு குறித்து...?
பதில்: மக்களின் மனநிலைக்கு ஏற்ப அரசு செயல்பட்டால், அதை வரவேற்க வேண்டும். தற்போது பால் விலை உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு உள்ளது. எனவே, மக்களின் மனநிலையை புரிந்து அரசு செயல்பட வேண்டும்.
கேள்வி: இலங்கையில் புதிய அரசு அமைத்து தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்பலாம் என தகவல் தெரிவித்துள்ளனரே?
பதில்: மனசாட்சிப்படி அங்கு படிப்படியாகத்தான் நிலைமைகளை தெரிந்து கொண்டு நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார் ஜி.கே.வாசன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications