லோக்சபா தேர்தல்: மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வரும் மதிமுக அரசியல் ஆலோசனைக்கழு உறுப்பினர், தீர்மானக்குழு உறுப்பினர், தேர்தல் பணித் துணைச் செயலாளர்களை நியமித்துள்ளது.

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணித் துணைச்செயலாளராக பணியாற்றி வந்த திரு. குட்டி (எ) சண்முகசிதம்பரம் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழகத்தின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றுவார்.

அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்

அரசியல் ஆய்வுமய்ய உறுப்பினர் நியமனம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணித் துணைச்செயலாளராக பணியாற்றி வந்த திரு. டி.சி. இராஜேந்திரன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழகத்தின் அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள அரசியல் ஆய்வுமய்யச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றுவார்.

சட்டதிட்டத் திருத்தக்குழு உறுப்பினர் நியமனம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணித் துணைச்செயலாளராக பணியாற்றி வந்த வழக்கறிஞர் பி. பழனிச்சாமி அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழகத்தின் சட்டதிட்டத் திருத்தக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றுவார்.

தீர்மானக்குழு உறுப்பினர் நியமனம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணித் துணைச்செயலாளராக பணியாற்றி வந்த திரு. திருப்புவனம் இரா. பாலுச்சாமி அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழகத்தின் தீர்மானக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள தீர்மானக்குழுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றுவார்.

மாநிலத் தேர்தல் பணித் துணைச் செயலாளர்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தேர்தல் பணித் துணைச் செயலாளர்களாக திரு, ஏ. கேசவநாராயணன், திரு. மா. விஜயகுமார் பாக்கியம், திரு. கு. மத்தேயு ஜெபசிங், திரு. எஸ்.ஆர். செந்தில்குமார், திரு. அ. சேதுபதி, திரு. சி.ஜெ. வசந்த் திரு. மு. கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள மாநிலத் தேர்தல் பணிச் செயலாளருடன் இணைந்து கழகப் பணியாற்றுவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+