எச். ராஜா பின்னணியில் அமித்ஷா, மோடி.. வைகோ குற்றச்சாட்டு!
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கொடுக்கும் தைரியத்திலேயே எச். ராஜா செயல்படுவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கொடுக்கும் தைரியத்திலேயே எச். ராஜா தமிழகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச். ராஜாவிற்கு கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. பெரியார் மையம் இடிக்கப்பட்ட போது பிரதமர் வாஜ்பாயிடம் முறையிடப்பட்டது.
திராவிடர் கழகம் தேர்தலில் நிற்கவில்லை என்றதும் வாஜ்பாய் பெரியார் சமூக நீதிப் போராளி என்று கூறி பெரியார் மையம் இடிக்கப்பட்ட ஆயிரம் மடங்கு விலைமதிப்புள்ள இடத்தை அப்பல்லோ மருத்துவமனைக்கு பின்புறம் தர முன்வந்தார்.

வாஜ்பாய், அத்வானிக்கு தெரியும்
பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாயே பெரியார் சமூக நீதிப் போராளி என்று பாராட்டியவர். நான் பாஜக முழுவதையும் விமர்சிக்கவில்லை, பெரியார் மையம் இடிக்கப்பட்டதற்கு அத்வானி அன்று தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

எச். ராஜாவின் விஷமத்தனம்
பெரியார் மையத்திற்கே அப்படி, ஆனால் இன்று எச். ராஜாவின் கருத்தால் அன்றைய தினமே திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதனை பார்த்த ஒரு டீக்கடைக்காரர் பிடித்து சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு கொடுக்க வேண்டியவற்றை கொடுத்துள்ளார்.

யார் தைரியம் கொடுத்தது
எச். ராஜா பெரியாரை விமர்சிப்பதற்கான தைரியத்தை யார் கொடுத்தது. எச். ராஜா பேசுவது அவருடைய கருத்தல்ல பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவினுடைய கருத்து. பெரியாரைப் பற்றி தவறாக கருத்து கூறிய எச். ராஜா மீது அமித்ஷா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

இன்றும் ராஜா சர்ச்சை கருத்து
பெரியார் சிலை பற்றி பேசிய சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே இன்று காலையில் தமிழைப் பெரியார் மதிக்காதவர் என்று மீண்டும் பேசியுள்ளார் எச். ராஜா. தமிழ் எழுத்துகளில் சீர்திருத்ததை கொண்டு வந்தவர் தந்தை பெரியார் என்பதை வரலாற்றை பார்த்தால் தெரியும் என்றும் வைகோ கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications