பாஜகவிலிருந்து விலகுகிறது மதிமுக?- நாளை வைகோ முக்கிய ஆலோசனை!
சென்னை: மதிமுகவின் உயர் மட்ட குழுக் கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ளது. இதில் பாஜக கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து பொதுச் செயலாளர் வைகோ முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைத் தமிழர் விவகாரம், ராஜபக்சேவுடனான மத்திய அரசின் நெருக்கம், தமிழக மீனவர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அரசுக்கும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் கடும் மோதல் வெடித்துள்ளது. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார் வைகோ.

ஆனால் இதை அரசியல்ரீதியாக சந்திக்காமல், தனிப்பட்ட முறையில் வைகோ பாதுகாப்பாக நடமாட முடியாது, வீடு திரும்பமுடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துப் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராஜாவின் பேச்சுக்கு திமுக தலைவர் கருணாநிதி முதல் பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மறுபக்கம் சுப்பிரமணியசாமி மூலம் தமிழர்களைச் சீண்டிப் பார்த்து வருகிறது பாஜக மேலிடம். சாமியின் சர்ச்சைப் பேச்சுக்களை பாஜக இதுவரை பகிரங்கமாக கண்டிக்காமலும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் நாளை சென்னையில் உள்ள மதிமுக தலைமைக் கழக அலுவலகமான, தாயகத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் உயர்மட்ட குழு கூட்டம், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில், கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவது குறித்தும் முடிவு எடுக்கப்படுகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications