பாஜக அணியில் திமுக- அதிமுக கூடாது என வைகோ நிபந்தனை: தமிழருவி மணியன்
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் அதிமுக, திமுக ஆகியவை இடம்பெறக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ நிபந்தனை விதித்தார் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். மதிமுக, தேமுதிக, பாமக ஆகியவற்றை பாஜக கூட்டணியில் இணைப்பதற்கான அனைத்து வேலைகளையும் தமிழருவி மணியன் செய்து வருகிறார்.
இது தொடர்பாக சென்னையில் தமிழருவி மணியன் நேற்று கூறியதாவது:

வைகோ நிபந்தனை உண்மைதான்!
டெல்லியில் ராஜ்நாத்சிங்கைச் சந்தித்தபோது லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாகத்தான் வைகோ பேசினார். பாஜக கூட்டணியில் இடம்பெறுவேன் என்று வைகோ உறுதியளித்துள்ளார். ஆனால் பாஜக கூட்டணியில் திமுக, அதிமுக இடம்பெறக்கூடாது என்று ராஜ்நாத் சிங்கிடம் அவர் கூறியது உண்மை.

மூடி மூடி பேசும் தமிழக பாஜக
தமிழக பாஜகவில் உள்ள சிலர் வைகோ கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்று கூறுகின்றனர். மோடி அலை வீசும் நேரத்தில் பாஜகவினர் மூடிமூடியிட்டு பேசக்கூடாது. தமிழகத்தில் மொத்தம் 48 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இளைஞர்கள், படித்தவர்கள். புதிய தலைமுறையினர் ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தையே விரும்புகின்றனர்.

32% வாக்குகள்
அதனால் மோடிக்கு 8% வாக்குகளும், பூரண மதுவிலக்கு கோரி நடைப்பயணம் சென்றதால் மதிமுகவுக்கு 8% வாக்குகளும், தேமுதிகவுக்கு 8% வாக்குகளும், பாமக 8% வாக்குகளும் உள்ளன. மொத்தம் 32 சதவீத வாக்குகள் வருகின்றன.

பாமக நிலை என்ன?
இந்த வாக்குகள் வேறு கட்சிகளுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. அதனால் பாமகவும், தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். ராமதாஸை கடந்த மாதம் சந்தித்துப் பேசினேன். அப்போது தனித்தே போட்டியிடப் போவதாகவும், ஆனால் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடிக்கே ஆதரவு என்று கூறினார்.
அதன் பிறகு பாஜகவுடன் பாமகவுக்குக் கூட்டணி ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் எனக்கு அந்தத் தகவல் இல்லை.

விஜயகாந்தின் அச்சம்
தேமுதிக தலைவர் விஜயகாந்தை இரண்டு முறை சந்தித்துப் பேசினேன். அதிமுகவுடன் பாஜக சென்றுவிட்டால் என்ன ஆவது என்று அவர் சந்தேகம் எழுப்பினார். இந்தச் சந்தேகத்துக்குப் பதில் அளிக்க வேண்டியது பாஜகதான் என்று அவரிடம் கூறினேன்.

அதிமுக- பாஜக கூட்டணி இல்லை
ஒரு கூட்டணியில் இரண்டு பிரதமர் வேட்பாளருக்கு இடம் இல்லை என்று இல.கணேசன் கூறியுள்ளதால், இனி அதிமுக பாஜக கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. அதன் பிறகு இரண்டாம் முறை விஜயகாந்த்தை சந்தித்தபோது, கூட்டணி அறிவிப்பை ஜனவரி மாதம் மாநாடு நடத்தி, மக்களின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினார்.

பாஜக அணியில் இணையுங்கள்..
எனவே பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. இணைய வேண்டும்.
இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications