வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில் எது பெரிய கட்சி... கருத்து கணிப்பு சொல்வது என்ன?
சென்னை: வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்க 5.4% பேர் ஆதரவு தெரிவித்திருப்பதாக பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழுவின் கருத்து கணிப்பு கூறுகிறது. ஆனால் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தனித்தனி செல்வாக்கு என்பது பாஜக, காங்கிரஸை விட மோசமானதாக உள்ளது.
தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றால் என்ன மாதிரியான முடிவுகள் கிடைக்கும் என்பது குறித்து லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வகம் கருத்து கணிப்பு நடத்தி இன்று முடிவுகளை அறிவித்தது.

இதில் எந்த கட்சி தலைமையிலான ஆட்சி அமையும் என்று கேட்டதற்கு திமுகவுக்கு 33.7%, அதிமுகவுக்கு 35.7 %, மக்கள் நலக்கூட்டணிக்கு 5.4%, பாமகவுக்கு ஆட்சி 2.2% என ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தனித்தனியாக கட்சிகளுக்கு ஆதரவு என்கிற கேள்விக்கு மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள
மதிமுகவுக்கு 1.5%
இடதுசாரிகளுக்கு 1.2%
விசிகவுக்கு 1.2% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தேசிய கட்சிகளான பாஜக 2%; காங்கிரஸ் 1.8% வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் இந்த இரு கட்சிகளையும் கூட்டணியிலேயே சேர்க்கமாட்டோம் என பிரகடனம் செய்த மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளோ அவற்றை விட மிகக் குறைவாகவே ஆதரவு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications