துரை வைகோவின் மக்கள் குறைதீர்ப்பு பயணம்! மதிமுக மக்கள் பிரதிநிதிகளை நேரில் அழைத்து ஆய்வு!
தென்காசி: தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் தான் மக்கள் நலப் பணிகள் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் மக்கள் குறைதீர்ப்பு பயணத்தை தொடங்கியுள்ளார் மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ.
மதிமுக சார்பில் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்களை நேரில் அழைத்து அவர்கள் மேற்கொண்ட பணிகள், தீர்த்து வைத்த மக்களின் குறைகள் பற்றி கேட்டறிந்து வருகிறார்.

இது தொடர்பாக துரை வைகோ விடுத்துள்ள பதிவு வருமாறு;
''மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம மக்கள் குறை தீர்ப்பு பயணமாக கடந்த 13.05.2023 அன்று துவங்கப்பட்ட முதற்கட்ட பயணம் இதுவரை ஆறு வார்டுகளில் நிறைவு பெற்று உள்ளது.
மற்ற பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஆய்வுக் கூட்டம் கலிங்கப்பட்டியில் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தலில் நாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி மக்களிடம் செல்ல வேண்டும், மக்கள் பிரச்சனைகளை கேட்க வேண்டும், அதற்கான தீர்வினை காண வேண்டும் என்று கிராமம் வாரியாக, தெரு வாரியாக மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கையினை பதிவு செய்து அதன்படி இந்த வருடம் என்ன பணி செய்ய வேண்டும்? இதுவரை நடைபெற்று உள்ள பணிகளின் விபரம் என்ன? பணி நிறைவு பெறும் காலம் எப்போது? என்ற புள்ளி விவரத்துடன் பதிவு செய்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தேன்.
அதன் படி கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை வகைப்படுத்தப்பட்டு, பதிவு செய்து இருந்த தரவுகளை ஆய்வு செய்து நமது ஒன்றிய குழு உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன். ஐந்து மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொண்டேன்.''
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications