கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக சரிந்துபோன மதிமுக வாக்கு சதவீதம்
சென்னை: சட்டசபை தேர்தல்களில் மதிமுகவின் வாக்கு வங்கி படுமோசமாக 0.9% தான் கிடைத்துள்ளது. 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 5.78% வாக்கு வங்கி கணக்கைத் தொடங்கிய மதிமுக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக வாக்கு சதவீதத்தை பரிதாபமாக இழந்து நிற்கிறது.
1993-ம் ஆண்டு திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்டார். வைகோவுக்கு ஆதரவாக 9 மாவட்டச் செயலாளர்களும், 400 பொதுக்குழு உறுப்பினர்களும் திமுகவில் இருந்து வெளியேறினர். இதையடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் கட்சியை 1994-ம் ஆண்டு தொடங்கினார் வைகோ.

5.78% வாக்குகள்
1996 சட்டசபை தேர்தலில் மதிமுக முதன்முதலில் போட்டியிட்டது. திமுக, அதிமுகவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி வைத்து 177 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால் அந்த தேர்தலில் 5.78% வாக்குகளை மதிமுக பெற்றது.

4.65% வாக்குகள்
1998 லோக்சபா தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்த மதிமுக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது பாஜக ஆட்சி கவிழ்ந்ததால் மீண்டும் நடந்த தேர்தலில் மதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றது. 2001 சட்டசபை தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் 211 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 205 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. எனினும், அக்கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன. அப்போது மதிமுகவின் வாக்கு சதவீதம் 4.65%.

மீண்டும் 5.89%
2004 லோக்சபா தேர்தலில் திமுக - காங்கிரஸ் அணியில் திருச்சி, வந்தவாசி, சிவகாசி, பொள்ளாச்சி தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது. 2006 சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் 35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது மதிமுகவின் வாக்கு சதவீதம் 5.89% ஆக உயர்ந்தது.

அங்கீகாரம் ரத்து
2009 லோக்சபா தேர்தலில் 4 இடங்களில் போட்டியிட்ட மதிமுக ஈரோட்டில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் வெறும் 2.67% வாக்குகளே கிடைத்தது. இதனால் மதிமுகவின் தேர்தல் அங்கீகாரமும் ரத்தானது.

0.9% வாக்குகள்
2011-ல் சட்டசபை தேர்தலையே மதிமுக புறக்கணித்தது. 2014 தேர்தலில் பாஜக-தேமுதிக-பாமக அணியில் இருந்த மதிமுக 7 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும் 2.57% வாக்குகளை அது பெற்றது.
தற்போதைய தேர்தலில் தேமுதிக-ம.ந.கூட்டணி-தமாகா அணியில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் மதிமுக டெபாசிட் இழந்துள்ளது. அதே நேரத்தில் 0.9% வாக்குகளையே மதிமுக பெற்றுள்ளது. 5.78% வாக்குகளில் தொடங்கிய மதிமுக 0.9% என வீழ்ந்து கிடப்பது என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகத்தான் இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications