ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும்.. பூசாத மாதிரியும் இருக்கனும்.. இதெல்லாம் அரசியல்வாதிகளின் நேக்மா!
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மதிமுக பிரமுகர் கோ. கலையரசன் என்பவர் 18 ஆயிரம் ரூபாய்க்கு மதுவை வாங்கி அதை சாலையில் ஊற்றி வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினார்.
இவரது போராட்டத்தால் இரண்டு லாபம் கிடைத்தது. ஒன்று டாஸ்மாக்குக்கு வருமானம் + இவரும் பாலிட்டிக்ஸ் செய்தது போல ஆனது. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வாரே.. ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்னு.. அதே தான் இதுவும்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக செயலாளராக இருப்பவர் கோ.கலையரசன். இவர் மது விலக்கிற்காக வைகோ மாரத்தான் நடத்திய போது, மதுவிற்கு எதிராக கட்டுரை போட்டியை மாணவ, மாணவிகளிடம் நடத்தி வைகோ வின் ஆதரவையும் பெற்றதோடு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக மதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை பல வகையில் தெரிவித்து வரும் நிலையில் அரவக்குறிச்சி பகுதியில் இளவரசன் நூதனப் போராட்டம் நடத்தினார்.
அங்குள்ள மதுபானக் கடைகளில் இருந்த மது வகைகளை, தங்களிடம் இருந்த சுமார் ரூ 18 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தைக் கொடுத்து வாங்கி நடு ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினார் இளவரசன்.
ரொம்பச் சிறப்பா செய்துட்டிங்க தலைவா!












Click it and Unblock the Notifications