மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்.. இன்று 7-ஆவது நாள்
மதுரை அரசு இராசிசி மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை: மதுரை அரசு இராசிசி மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏழாவது நாளான இன்று மருத்துவமனையின் நுழைவாயிலில் பந்தல் போட்டு போரட்டம் நடத்தி வருகின்றனர்.
இடஒதுக்கீடு முறையை ஒழுங்குப்படுத்த கோரி மதுரை மருத்துவ கல்லூரி முதுநிலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடாக நடத்தப்பட்ட நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை வெளிப்படையாக வெளியிட்டு கலந்தாய்வு, இடமாறுதல் செய்ய வேண்டும் என நிறைய கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

மேலும் 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறி காலவரையின்றி மெளன போராட்டம் மற்றும் தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் நூதன முறையில் போராடி வருகின்றனர்.
பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி அமைத்து கண்களின் கருப்பு துணிக் கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7வது நாளாக இன்று சவப்பெட்டி தயாரித்து பினம்போல் உள்ளே படுத்துக் கொண்டு தங்கள் போரட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications