கோவை: பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
கோவை: பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டம் படித்து வந்த மருத்துவ மாணவி ஒருவர் 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர் திட்டியதாலேயே அம்மாணவி மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த லட்சுமி, கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டம் படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் வகுப்புக்கு வந்த லட்சுமி, மருத்துவக் கல்லூரியின் 4 வது மாடியில் இருந்து திடீரென குதித்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஒருமணி நேரத்துக்கும் மேலாக மாணவி லட்சுமிக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி லட்சுமி உயிரிழந்தார். மாணவி கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலை வகுப்பறையில் மாணவி லட்சுமியை, பேராசிரியர் ஒருவர் திட்டியதாகவும், இதனால் மனமுடைந்தே அவர் இந்த முடிவை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இது குறித்து பேட்டியளித்த துணை இருப்பிட மருத்துவ அலுவலர் ரகுபதி, மாணவி லட்சுமி 4 வது மாடியில் இருந்து குதித்ததாகவும் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவியை காப்பாற்ற முடியவில்லை, எனவும் தெரிவித்தார். பேராசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவி மாடியில் இருந்து குதித்ததாக வெளியான தகவல் குறித்து பதில் அளிக்க மறுத்து விட்டார்.
இதுகுறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன என்பதை அறிய விசாரணை நடத்துகின்றனர். மாணவியின் தற்கொலை தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் விசாரணை மேற்கொண்ட பீளமேடு காவல் துறையினர் மாணவியின் உடைமைகளை சோதனையிட்டனர்.
மாணவியின் அப்பா நரேந்திரன், அம்மா சுதா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி லட்சுமி சமீபகாலமாக சரியாக படிக்காமல் இருந்து வந்ததாகவும் கல்லூரி தரப்பில் கூறப்படுகிறது. மருத்துவமாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications