Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுனாமியிலேயே "ஸ்விம்மிங்" போட்டவங்க நம்மாளுங்க.. ப்ளூவேலை விடுவாங்களாக்கும்!!

தமிழகத்தில் ப்ளூவேல் விளையாட்டால் திருமங்கலத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் உயிரிழந்த நிலையில் பலருக்கும் பீதி ஏற்பட்டது. எனினும் நமது நெட்டிசன்கள் த்ரில்லர் விளையாட்டை வைத்து சில அற்புதமான மீம்ஸ்களை உருவ

Subscribe to Oneindia Tamil

சென்னை : ப்ளூவேல் விளையாடியதால் கல்லூரி மாணவன் உயிரிழந்ததையடுத்து அனைத்து பெற்றோர் மத்தியிலும் பெரும் பீதியை கிளப்பியது இந்த ஆன்லைன் விளையாட்டு. எனினும் எதுவாக இருந்தால் அதை ரசிக்கும்படி மீம்ஸ் போடும் நெட்டிசன் கூட்டம் ப்ளூவேல் விளையாட்டை வைத்தும் சில சுவராஸ்ய டுவீட்டுகளை தட்டிவிட்டுள்ளனர்.

ப்ளூவேல் இணையதள விளையாட்டின் வீரியம் நேற்று மதுரையில் நடந்த ஒரு அசம்பாவித சம்பவத்தால் அனைவரின் வயிற்றிலும் புளியை கரைத்தது. நமக்கு தெரியாமல் நம்முடைய வீட்டில் இந்த நீலத் திமிங்கல அரக்கன் புகுந்து விட்டானோ என்று அச்சத்தில் உள்ளனர் பெற்றோர்.

ஆனால் ப்ளூவேல் என்ன எந்த வேலாக இருந்தாலும் தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருப்போம்ங்கிறத நிரூபிச்சிருங்காங்க நெட்டிசன்கள். சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் வலம் வரும் சுவராஸ்யமான மீம்ஸ்கள் சில இங்கே.

ப்ளூ கலர்னாலே பிரச்னை தானோ?

அண்மையில் விவகேம் பட விமர்சனத்தின் போது ப்ளூ கலர் சட்டை மாறன் விவேகம் படம் மற்றும் அஜித் ரசிகர்களை கேவலப்படுத்த, அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் ப்ளூ கலர்னாலே பிரச்னை தானோ என்று ஒருவர் டைமிங்காக மீம் போட்டுள்ளார்.

ப்ளவேல் அரோகரா!

ப்ளுவேல் என்ற வார்த்தை கேட்டாலே பலருக்கு திகில் கிளம்புகிறது. ஆனால் முருகனின் வேலை ப்ளூ கலரில் போட்டு நாங்களும் ப்ளூவேலை பதிவிறக்கம் செய்து விட்டோம் என்று ரகளை கூட்டுகிறார் இந்த நெட்டிசன்.

விபரீதத்தை விவரிக்கும் நகைச்சுவை

நண்பர் ஒருவர் ப்ளூவேல் கேம் பதிவிறக்கம் செய்துவிட்டதாகக் கூற, அதற்கு மற்றொருவர் அப்புறம் என்ன சுடுகாட்ட ரெடி பண்ண வேண்டியது தான் என்று விளையாட்டின் விபரீதத்தை நகைச்சுவையுடன் சொல்லியுள்ளார் இவர். எல்லாவற்றிற்கும் பொருந்தும் வடிவேலு காமெடியை டைமிங்காக போட்டிருக்கிறார் இவர்.

ப்ளூவேலை அறிமுகப்படுத்தியது செந்தில்

தமிழ்நாட்டுக்கு ப்ளூவேல் விளையாட்டு ஜெய்ஹிந்த் படத்திலேயே வந்துடுச்சுங்க. என்ன புதுசா இருக்கா, அந்தப் படத்துல செந்தில் அட்மினாக வந்து கவுண்டமணிக்கு பல்வேறு டாஸ்க்குகளை கொடுப்பாரே நியாபகம் இருக்கா, அதைத் தான் ஒரு நெட்டிசன் இங்கு நினைவுபடுத்தி இருக்கிறார்.

 மனைவி ஃபோனில் ப்ளூவேல் ஜோக்

மனைவி ஃபோனில் ப்ளூவேல் ஜோக்

இதே போன்று வாட்ஸ் அப்பில் வலம் வரும் ஜோக் ஒன்றில், என்னுடைய மனைவியுடைய ஃபோனில் ப்ளூவேல் டவுன்லோடு செய்துவிட்டதை சந்தோஷமாக சொல்கிறார் கணவர். ஆனால் கடைசியில் என்னவாச்சு தெரியுமா 50வது நாள் ப்ளூவேல் செத்துபோச்சு என முடிகிறது ஜோக்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+