பழம் பழுக்கலைன்னாலும் புகைபோட்டு பழுக்க வைப்பாரு கருணாநிதி! மீம்ஸ் கலாட்டா
சென்னை: தேமுதிகவுடன் இன்னமும் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி சொன்னாலும், சொன்னார்.. சமூக வலைத்தளமான டிவிட்டரில், கேலியும், கிண்டலும் ஊற்றெடுத்து சாடுகிறது.
மூத்த அரசியல்வாதியான கருணாநிதி, இத்தேர்தலில் கூட்டணிக்காக அலைக்கழிக்கப்படுவதை பார்த்து கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள். அதிலும் விஜயகாந்த்திடம் கருணாநிதி சிக்கிக்கொண்டிருப்பதாக கேலி செய்கின்றன மீம்ஸ்கள்.
கருணாநிதி பேட்டியளித்த அடுத்த சில நிமிடங்களிலேயே சுடச்சுட வெளியான மீம்ஸ்களின் ஒரு தொகுப்பை இப்போது பாருங்கள்.
|
கட்டிக்கோ, கட்டிக்கோ
முதல்வன் படத்தில், வடிவேலுவிடம் என் மகள் அஞ்சுகத்தை கட்டிக்கோ என நச்சரிக்கும் கதாப்பாத்திரம், வடிவேலு முடியாது என்றதும் இடுப்பை பிடித்து கிள்ளும். இப்போது விஜயகாந்திடம் கருணாநிதி கெஞ்சுவதும் அதைப்போல உள்ளதாக இந்த மீம்ஸ் கூறுகிறது.
|
கருணாநிதி வாட்ஸ்அப் குரூப்
இது இன்னும் ரகளை ரகம். இந்த கற்பனையை பாருங்கள்: 'திமுக கூட்டணி' என்ற பெயரில் கருணாநிதி ஒரு வாட்ஸ்அப் குரூப்பை ஆரம்பித்து காங்கிரசையும், விஜயகாந்த்தையும் சேர்க்கிறார். ஆனால் விஜயகாந்த் விலகிவிடுகிறாராம். மீண்டும் குரூப்பில் சேர்க்கும் கருணாநிதி, 'வணக்கம் தம்பி' என ஒரு ஐஸ் போடுகிறாராம். அதன்பிறகு, 'பழம் கனிந்து பாலில் விழும்' என்று ஒரு மெசேஜையும் தட்டுகிறாராம் கருணாநிதி. ஆனால் மறுமுனையில் அந்த மெசேஜை விஜயகாந்த் பார்க்கவில்லை. நெட்டையே ஆப் செய்துவிட்டார். (மெசேஜில் ஒரு டிக்தான் உள்ளதை கவனிக்கவும்).
|
சுளை போச்சே
சூரியன் படத்தில், புதைக்குழிக்குள் விழுந்து கிடக்கும் கவுண்டமணி கதாப்பாத்திரம், தன்னை தூக்கிவிடுமாறு வருவோர், போவாரிடம் கெஞ்சும். கடைசியில் ஆரஞ்சு சுளையையாவது தந்துவிட்டு போ என்று கவுண்டமணி தனக்கு பழக்கமான நபரிடம் கேட்பார். கருணாநிதி நிலைமை அப்படியுள்ளதாக கூறுகிறது இந்த டிவிட்.
|
கருப்பு எம்ஜிஆர பார்த்தா பயம்?
எம்.ஜி.ஆரை பார்த்து கூட கருணாநிதி இப்படி அஞ்சியிருக்க மாட்டார். ஆனால் விஜயகாந்த்தை பார்த்து இப்படி பம்புகிறாரே என கேட்கிறது இந்த டிவிட்.
|
வரும்.. ஆனா வராது
ஒருபக்கம் கருணாநிதியும், மறுபக்கம் வைகோவும் அமர்ந்து விஜயகாந்த்தின் கூட்டணி முடிவுக்காக காத்திருப்பதை போன்ற மீம்ஸ் இது.
|
திரும்ப திரும்ப
ஒரு திரைப்படத்தில், பஞ்சாயத்தாரை குழப்புவதற்காக வடிவேலு, திரும்ப, திரும்ப ஒரே வார்த்தையை பேசுவார். அதைப்போல கூட்டணி பற்றி கருணாநிதி பேசிவருவதாக கேலி செய்கிறது இந்த டிவிட்.
|
புகை போட்டு பழுக்க வைக்கலாம்
பழம் என தேமுதிகவை ஒப்பிட்ட கருணாநிதி, இப்போது, அந்த பழத்தை புகை போட்டு பழுக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக, கவுண்டமணி கூறும் வார்த்தையை பயன்படுத்தி கேலி செய்கிறது இந்த மீம்.












Click it and Unblock the Notifications