For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அதிமுக நேர்காணல்"... ஏங்க இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு...!

Google Oneindia Tamil News

சென்னை: எது நடந்தாலும் அதனை உடனடியாக வச்சி செய்யக் காத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

தற்போது அவர்களின் வாயில் அவலாகக் கிடைத்துள்ளது ஒரே நாளில் நடந்து முடிந்த அதிமுகவின் நேர்காணலும், அரசு அலுவலகங்கள், அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படத்தை மூடும் பணி நடந்து வருவதும்.

இதனை வைத்து விதவிதமாக மீம்ஸ் செய்து இணையத்தில் அவர்கள் உலவ விட்டுள்ளனர். இதோ அவற்றில் சில...

ஒன்பது கிரகத்திலும் உச்சம்...

ஒன்பது கிரகத்திலும் உச்சம்...

ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவரால் வேட்பாளர்களைக் காணாமலே நேர்காணல் நடத்த முடியும் என்கிறது இந்த மீம்ஸ்.

சோதனை மேல் சோதனை...

சோதனை மேல் சோதனை...

மணமக்கள் நெற்றி முதல் சீராக வழங்கப்பட்ட ஆடுகளின் நெற்றி வரை கஷ்டப்பட்டு ஒட்டினார்கள் ஸ்டிக்கர் பாய்ஸ். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மறைக்கப்படுவதை சுட்டுக் காட்டுகிறது இது.

இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு...

இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு...

20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பமனுத் தாக்கல் செய்ததாக முன்னதாக அதிமுக தெரிவித்திருந்தது. அதற்கும் குறைவாக விருப்பமனுப் பெற்ற கட்சிகளே நாள் கணக்கில் நேர்காணல் நடத்திய நிலையில், ஒரே நாளில் அதிமுக நேர்காணலை நடத்தி முடித்தைக் கண்டு ஷாக் ஆனவர்களில் இவரும் ஒருவர் போல.

ஸ்டிக்கர் பாய்ஸ்...

ஸ்டிக்கர் பாய்ஸ்...

வெள்ளம் பாதித்த சமயத்தில் யார் யாரோ கொடுத்த நிவாரணப் பொருட்களில் எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி, ஸ்டிக்கர் பாய்ஸ் என உலகத்திற்கே அறிமுகமானார்கள் அதிமுக தொண்டர்கள். தற்போது தாங்கள் ஒட்டிய ஸ்டிக்கர்கள் கிழிக்கப்படுவதால் இப்படி கதறி அழுகிறார்களாம்.

நிமிர்த்தவே முடியாதது...

நிமிர்த்தவே முடியாதது...

பொதுவாக நாய் வாலைத் தான் நிமிர்த்த முடியாது என்பார்கள். ஆனால், கடந்த 5 வருடங்களாக அடிக்கடி குனிந்து விழுந்து யோகாசனம் செய்ததால் தற்போது அமைச்சர்களின் முதுகுகளையும் நிமிர்த்தவே முடியாது என இந்த மீம்ஸ்-ல் கூறப்பட்டுள்ளது.

English summary
Here is an interesting memes on Amma sticker and ADMK candidate selection, which is on rounds in Net.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X