நானும் எங்க சின்ன மம்மி மாதிரி ஓரளவுதான் பொறுமை காப்பேன்.. என்மேல யாரும் புகார் அளித்தால்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலைச்சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்பவரிடம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சுகேஷ் சந்திராவை கைது செய்துள்ள டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். டிடிவி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி.தினகரனின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் டிடிவி தினகரனை கலாய்த்து நெட்டிசன்கள் இணையதளத்தில் ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

சும்மா விடமாட்டங்க போல

போற போக்கப் பாத்தா.. நம்மள உள்ள வச்சு கும்மாங்குத்த குத்தி களி திங்க வக்காம விடமாட்டானுக போல...

ஓரளவுக்குதான் பொறுமை

நானும் எங்க சின்ன மம்மி மாதிரி ஓரளவுதான் பொறுமை காப்பேன்.. என்மேல யாரும் புகார் அளித்தால் சட்டப்படி சந்திப்பேன்...

இன்னோவாவுக்கு எங்க போவேன்

அவசரப்பட்டு பன்னீரை வேற அவன் இவன்னு திட்டிட்டேனே இனி என்ன பண்ணுவேன்... இன்னோவாவுக்கு எங்க போவேன் - நாஞ்சில் சம்பத்

சம்மன் அனுப்புற வேலலாம்..

யோவ்... சம்மன் அனுப்புற வேலலாம் வெச்சிக்காத... இந்த 50 ரூபாயை லஞ்சமா வெச்சிக்கோ... என டிடிவி தினகரனை கலாய்க்கிறது இந்த மீம்...

அடிமேல் அடின்னா..

வருமானவரி சோதனை, தேர்தல் புகார்கள், தேர்தல் ரத்து, சின்னம் முடக்கம்... அடிமேல் அடின்னா.. இதுதானோ... என்கிறது இந்த மீம்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes on internet about TTV Dinakaran bribe for the double leaf symbol.
Please Wait while comments are loading...