சென்னை லெஸ்பியன் ஹெல்ப்லைனுக்கு போன் பண்றதுல முக்கால்வாசி பேர் ஆண் 'ஜொள்ளர்களாம்'!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லெஸ்பியன் பெண்களுக்கு வழிகாட்டுவதற்காக சென்னையில் திறக்கப்பட்ட ஹெல்ப்லைனுக்கு போன் செய்து விளக்கம் கேட்பதில் 80 சதவீதம் பேர் ஆண்கள்தானாம்.. எப்படி.. எப்படி.. என்பது போன்ற கேள்விகளை கேட்டு அங்குள்ள பெண்களை தர்ம சங்கடப்படுத்தி வருகின்றனர் ஜொள்ளர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, வட சென்னையில் லெஸ்பியன் ஜோடி ஒன்று, சமூக புறக்கணிப்பால் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த சம்பவத்தின் பாதிப்பால், இனிமேல் இப்படி நடக்க கூடாது என்ற எண்ணத்தால், இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபேர் ஆர்கனிஷேசன் என்ற தன்னார்வ அமைப்பு சென்னையில் லெஸ்பியன்களுக்கான ஹெல்ப்லைனை அமைத்துள்ளது.

ஹெல்ப்லைன்

ஹெல்ப்லைன்

இந்த லெஸ்பியன் மையத்தில், பெண்கள் தன்னார்வலர்களாக வேலை பார்க்கின்றனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்த ஹெல்ப்லைன் செயல்படும். 044-65515742 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு லெஸ்பியன் எண்ணம் கொண்ட பெண்கள் விளக்கம் கேட்டுக்கொள்ளலாம்.

தனிமையில் இருந்து ஆறுதல்

தனிமையில் இருந்து ஆறுதல்

பெரும்பாலான ஓரினச் சேர்க்கையாளர்கள், தாங்கள் மட்டும்தான் இதுபோன்ற எண்ணத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுய பச்சாதாபம் பட்டுக்கொள்வர். இந்த ஹெல்ப்லைனுக்கு போன் செய்தால், உலகில் இதுபோன்ற எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் இருப்பதை ஆதாரங்களுடன் கூறி, அந்த எண்ணம் கொண்டவர்களை தேற்றுவார்கள். அதன்பிறகு அவர்கள் மனதை மாற்றியமைத்து, இயற்கையான பாதைக்கு கொண்டு வருவார்கள்.

ஜொள்ளர்கள் தொல்லை

ஜொள்ளர்கள் தொல்லை

இப்படி நல்ல நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த லெஸ்பியன் ஹெல்ப்லைனை தங்களின் காம நோக்கத்திற்கு பயன்படுத்துகின்றனர் பல ஆண்கள். தினமும் சராசரியாக 25 அழைப்புகள் இம்மையத்துக்கு வரும் நிலையில், அதில் 80 சதவீம் ஆண்களின் அழைப்பாகத்தான் உள்ளதாம்.

கூலாக பேச்சை தொடங்குவது

கூலாக பேச்சை தொடங்குவது

இதுகுறித்து ஹெல்ப்லைனில் பணியாற்றும் அக்சம் என்ற பெண் கூறுகையில், "ஹெல்ப்லைனுக்கு போன் செய்யும் ஆண்கள், முதலில் அப்பாவி போல பேச ஆரம்பிக்கின்றனர். தங்களது சகோதரிக்கோ, மனைவிக்கோ அல்லது தெரிந்த வேறு எந்த ஒரு பெண்ணுக்கோ, லெஸ்பியனில் நாட்டம் இருப்பதாகவும், அதை தீர்க்க வழி சொல்லும்படியும் கேட்கின்றனர்.

ஹாட்டாக மாறுவது

ஹாட்டாக மாறுவது

இதற்கு அளிக்கப்படும் விளக்கத்தை கேட்டபடி, மருத்துவ சந்தேகம் கேட்பது போல அடுத்த டாப்பிக்கிற்கு தாவுகின்றனர். ஏன் பெண்களுக்கு பெண்கள் மீது ஆசை வருகிறது என்று கேட்பதில் ஆரம்பித்து, லெஸ்பியன் உறவின்போது இரு பெண்களும் என்ன செய்துகொள்வார்கள் என்பதுவரை ஆபாசமாக பேச்சு தொடருகிறது" என்றார் வருத்தத்தோடு.

பல நாட்டு தமிழ் பெண்களுக்கும் உதவி

பல நாட்டு தமிழ் பெண்களுக்கும் உதவி

தன்னார்வ அமைப்பின் செயலாளர் ஏ.ஜே.ஹரிகரன் கூறுகையில், 2009ல் ஹெல்ப்லைன் ஆரம்பித்தோம். தினமும் சராசரியாக 25 அழைப்புகள் வருகின்றன. தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, லண்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் பெண்களிடமிருந்தும் சந்தேகம் கேட்டு அழைப்புகள் வருகின்றன. இந்த ஹெல்ப்லைன் பலரது மன அழுத்தத்தை மாற்றியுள்ளது என்றார்.

இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் எஜமான்..

இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் எஜமான்..

பிரபல உளவியல் நிபுணர் ஒருவர் கூறுகையில், "சில ஆண்களுக்கு தொலைபேசி வழியாக ஒரு பெண்ணிடம் செக்ஸ் பற்றி பேசுவதில் கிளுகிளுப்பு கிடைக்கும். இந்த விவகாரத்திலும் அப்படித்தான் நடப்பதாக தெரிகிறது. பொறுப்பற்ற மனிதர்கள்தான் நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டத்தை கெடுக்கும் வகையில் நடப்பார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+