மெர்சல் படத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு - மோடிக்கு எதிராக ட்விட்டரில் பதிவு

மோடி அவர்களே சினிமா என்பது தமிழர்களின் மொழி, கலாச்சாரம் என்று மெர்சல் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், திரு மோடி அவர்களே, திரைப்படம் என்பது தமிழ் மொழி கலாச்சாரத்தின் வெளிப்பாடு. மெர்சல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழின் மதிப்பை குலைக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Mersal issue Rahul Ganthi twits against Modi

விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இந்த படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறை, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை குறித்து நடிகர் விஜய் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது பாஜகவை கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டது.

ஜிஎஸ்டி குறித்து மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். மேலும் மக்கள் நலன் சார்ந்த படம் என்றால் இலவசமாக மக்களுக்கு காட்ட வேண்டியதுதானே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை எதிர்த்து ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்திற்கு பாஜகவிற்கு எதிராக பதிவிட்டார். இதனை எதிர்த்து பாஜகவின் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனிடையே ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது ஆதரவை பதிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+