மெர்சல் பாடல் வெளியீட்டு விழா.. நேரு விளையாட்டரங்கத்தை அதிர வைத்த ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்து வெளியாக உள்ள மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நேரு விளையாட்டரங்கத்தை அதிர வைக்கும் வகையில் ரசிகர்கள் குவிந்து ஆரவாரம் செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மெர்சல்-ஆளப்போறான் தமிழன் முழுப்பாடல்-வீடியோ

    சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், கலைஞர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ், இயக்குநர் பார்த்திபன் ஆகியோரும் பங்கேற்றனர்.

    இதை எல்லாம் தாண்டி ரசிகர்கள் தானே நடிகர் நடிகைகளின் வெற்றிக் காரணம். அந்த வகையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அமர்க்களப்படுத்தி விட்டனர்.

    வரவேற்பு

    வரவேற்பு

    நிகழ்ச்சிக்கு வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நிகழ்ச்சி தொடங்கும் முன்பே தங்களது இருக்கையைக் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். நிகழ்ச்சித் தொடங்கியது ஒவ்வொருவரும் மேடைக்கு வரும் போதும் கைதட்டி வரவேற்றனர்.

    ரகுமானின் சர்பிரைஸ்

    ரகுமானின் சர்பிரைஸ்

    நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது, இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் இப்போது மேடைக்கு வருவார்கள் எனத் தொகுப்பாளர்கள் அறிவித்த உடன் கைத்தட்டி ஆரவாரத்தில் ரசிகர் ஈடுபட்டனர். ஆனால், அதிரடியாக மேடைக்கு வந்தார் ஏ.ஆர். ரகுமான்.

    ஆரவாரம்

    ஆரவாரம்

    ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி. என்னடா இது சமந்தாவும் கஜோல் அகர்வாலும் வருவார்கள் என்று எதிர்பார்த்தால் ஏ.ஆர். ரகுமான் வருகிறார் என்ற அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் கத்தி பெரும் மகிழ்ச்சியை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

    விஜய் வணக்கம்

    விஜய் வணக்கம்

    இதேப் போன்று விஜய் மேடைக்கு வருவதற்கான அறிவிப்பைத் தொகுப்பாளர்கள் அறிவித்த உடன் ரசிகர்கள் கைத்தட்டி பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். விஜய், ரசிகர் முன் வந்து நின்ற உடன் எல்லாத் திசைகள் பக்கமும் திரும்பி கை அசைத்து வணக்கம் தெரிவித்தார்.

    விஜய் கட் அவுட்

    விஜய் கட் அவுட்

    விஜய் ஒவ்வொரு பக்கம் திரும்பும் போதும், நேரு விளையாட்டரங்கமே இடிந்து விழும் அளவிற்கு ரசிகர் கத்தி கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, முன் வரிசையில் இருந்த ரசிகர் சிலர் சிறிய அளவிலான விஜய் கட் அவுட்களை கைகளில் ஏந்திப் பிடித்து தங்கள் அன்பைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+