கபாலி டிக்கெட் விலை குறிப்பிடாமல் விற்பனை... கொதிக்கும் ரசிகர்கள்- இணையதளம் முடங்கியது
சென்னை: கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்று ஆசையில் அவரது ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கபாலி திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. கபாலி முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.
கபாலி திரைப்படம், வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் கபாலி திரையிடப்படுவதால், 10 புதிய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கபாலியை காண உலகத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இணையளத்தில் கபாலி படத்தின் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியவுடன், ஒரே நேரத்தில் அதிகமான ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்றனர். இதனால் சம்பந்தப்பட்ட இணையதளங்களின் சேவை முடங்கியது.
சென்னை சத்யம் திரையரங்கில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில மணித்துளிகளில் அனைத்து டிக்கெட்களுமே விற்றுத் தீர்ந்தன. பல ஊர்களில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில், சில திரையரங்குகளில் விலை என்ன என்பதை பிரின்ட் செய்யாமலேயே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.

பா.ரஞ்சித் இயக்கும் கபாலி
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.

ஜூலை 22ல் கபாலி
கபாலி படத்தின் தணிக்கை பணிகள் முடிந்து ஜூலை 22ம் தேதி வெளியாக இருக்கிறது. வெளிநாடுகளுக்கு படத்தை தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது பல்வேறு திரையரங்குகளில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

டிக்கெட் முன்பதிவு
சென்னை சத்யம் திரையரங்கில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில மணித்துளிகளில் அனைத்து டிக்கெட்களுமே விற்றுத் தீர்ந்தன. மேலும், பல ஊர்களில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.
|
விலை எவ்வளவு?
சில திரையரங்குகளில் விலை என்ன என்பதை பிரின்ட் செய்யாமலேயே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட் விலை இல்லை என்பதால் என்ன விலை வேண்டுமானாலும் விற்கலாம் என்பதுதான் இதற்கு காரணமாம்.
|
கொதிக்கும் ரசிகர்கள்
'கபாலி' படத்தின் டிக்கெட் விலையைக் கேட்டுவிட்டு பலரும், என்ன இவ்வளவு விலையா என்று தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விற்கப்பட வேண்டும். குறிப்பாக, முக்கிய நட்சத்திரங்களின் படங்களின் வெளியாகும்போது கண்காணிப்பு அவசியம் என்று சினிமா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளார்.
|
முடங்கிய இணையதள சேவை
இணையளத்தில் கபாலி படத்தின் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியவுடன், ஒரே நேரத்தில் அதிகமான ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்றனர். இதனால் சம்பந்தப்பட்ட இணையதளங்களின் சேவை முடங்கியது. டிக்கெட் கிடைக்காதவர்கள் மீம்ஸ் பதிவிட்டு ஆறுதல் பட்டுகொள்கின்றனர்.

மூன்று நாளைக்கு ஃபுல்
சென்னையில் பெரிய வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, முதல் மூன்று நாளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கபாலிடா... டிக்கெட்ரா... என்று டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் படம் போட்டு ஃபிலிம் காட்டுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications