இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை... பேரச்சத்தில் சென்னை, கடலூர்வாசிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் ஏற்கனவே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை ஆகியவற்றால் இன்றும் நாளையும் கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது வெள்ளத்தால் மிக மோசமாக் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் கடலூர்வாசிகளை பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஒரு மாத கனமழை, வெள்ளத்தால் மிக மோசமாக உருக்குலைந்து போனது சென்னையும் கடலூரும்தான். சென்னை நகரின் பல பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்தது.

chennairain

இந்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டாலும் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் எத்தனை வாரங்கள் ஆகுமோ என்கிற அளவுக்கு தலைகீழாக புரட்டிப் போடப்பட்டுள்ளது சென்னை மாநகரம். இதனால் இன்னும் எவ்வளவு காலத்துக்கு முகாம்கள் எனப்படுகிற தற்காலிக தங்கும் இடங்களில் தங்க வேண்டியது இருக்குமோ? என்ற நிலையும் இன்னமும் எவ்வளவு காலத்துக்கு பிறரை நம்பியே உணவுக்கு காத்திருக்க வேண்டும் என்ற அவலமும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.

சென்னை நகரில் பெரும்பாலான இடங்களில் மின்வசதி சீர்படுத்தப்பட்டதாக அரசு அறிவித்தாலும் பல பகுதிகள் இருளில் தொடர்ந்தும் மூழ்கிக் கிடக்கின்றன.

அரசு நிவாரணம் பல பகுதிகளில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தனியார் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள், சாதாரண பொதுமக்கள், இளைஞர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே சென்று அளித்து வருகின்றனர்.

வந்தவாசி, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருட்கள் குவிந்து வருகின்றன.

ஆனால் இந்த நிவாரணப் பொருட்களை முறைப்படுத்தி வழங்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.

ஒரு மாதமாக கொட்டித் தீர்க்கும் கனமழையால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தொடர்ந்தும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கிராமங்களுக்குள் பாய்ந்தோடுகிறது. ஆகையால் கடலூர் மாவட்டத்திற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத்தின் இரண்டு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+