சென்னையில் இடி மின்னலுடன் தொடர் மழை... இன்றும் மழை நீடிக்கும் என அறிவிப்பு
சென்னை : இரவில் இடி மின்னலுடன் நீண்ட நேரம் மழை கொட்டியதால், பகலில் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
பகலில் வெப்பம் வாட்டிய நிலையில், இரவில் இடி மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. வடபழனி, கோடம்பாக்கம், கோயம்பேடு, கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தாம்பரம் மற்றும் புறநகர்களில் ஆங்காங்கே லேசான மழை பதிவாகியது.

இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் அதிகபட்சமாக 50 மில்லி மீட்டர் மழை பதிவானது.












Click it and Unblock the Notifications