மீட்டர் வட்டியால் பலியாகும் உயிர்கள்!

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி, மீட்டர் வட்டி, மின்னல் வட்டி என பல்வேறு வகையில் வட்டித் தொழில் ராஜநடை போட்டு வருகின்றது. இதனால் பல அப்பாவி மக்கள் உயிர் இழந்த போதும் போலீசாரின் தூக்கம் மட்டும் இன்று வரை கலைந்தபாடு இல்லை.
அரசியல் புள்ளி ஒருவரிடம் கரூர் தேகமலை பெருமாள்பட்டியைச் சேர்ந்த விஜய் ஆனந்த் ரூ. 58,000 கந்து வட்டிக்கு வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லையாம்.
இதனால் அந்த அரசியல் புள்ளி தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் விஜய் ஆனந்த் வீட்டிற்கு சென்று கடன் தொகை ரூ.58 ஆயிரம் ரூபாய்க்கு 6 மாத வட்டியுடன் சேர்த்து ரூ. 2 லட்சத்து 75 லட்சம் ரூபாயை உடனே தந்தாக வேண்டும் என தங்களது பாணியில் மிரட்டியுள்ளார்.
அத்துடன் அவரது மனைவியைப் பற்றி சுயமரியாதையை பாதிக்கும் வகையில் நக்கல் அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விஜய் ஆனந்த் முதலில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அதில் உயிருக்கு போராடி பிழைத்துக் கொண்டார். பின்பு, தனது வீட்டில் ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் அரசியல் புள்ளியை சிறைக்கு அனுப்பவதில் போலீசார் முனைப்பு காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தனது குடும்பத்திற்கு நீதி வேண்டும் என விஜய் ஆனந்தின் மனைவி கரூர் மாவட்ட கலெக்டரிம் மனு அளித்துவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது தீபவாளி பண்டிகை நேரம் என்பதால் மீட்டர் வட்டி, மின்னல் வட்டி போன்றவைகள் அதிக அளவில் உள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications