பெறாத பிள்ளைக்கு பேர் வைக்க ஆசைப்படலாமா?- எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் கண்டனம்
மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்க நினைத்தவர் ஜெயலலிதா, பெறாத பிள்ளைக்கு பேர் வைக்க ஆசைப்படலாமா என்று ஸ்டாலின் கேட்டுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா தான் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வித்திட்டவர் என்று முதல்வர் பழனிசாமி தொடர்ந்து பொய் பேசி வருகிறார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திட்டத்தை முடக்க நினைத்தது ஜெயலலிதாதான் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கபாதை மெட்ரோ ரயில் திட்டம் நேற்று தொடக்கி வைக்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு 2003-ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித் தடம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித் தடம் என இரு வழித் தடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன.
ஜெயலலிதா. 29.6.2015 அன்று கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கி.மீ. உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் சென்னை மெட்ரோ இரயிலின் பயணிகள் சேவையை துவக்கி வைத்ததோடு, சென்னை மெட்ரோ இரயிலின் கோயம்பேடு பணிமனை மற்றும் கோயம்பேடு, சென்னை புறநகர்ப் பேருந்து நிலையம் அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையங்களையும் திறந்து வைத்தார்கள். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் ஜெயலலிதா என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கருணாநிதி கனவு திட்டம்
கருணாநிதியின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தை மறைக்க முதல்வர் முயற்சி செய்கிறார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது 7-11-2007-ல் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

திரும்ப திரும்ப பொய்
எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் திரும்ப திரும்ப பொய் சொல்வோம் என்பது போது எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். ஜெயலலிதாதான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் என்று கூறுவது வடிகட்டிய பொய். அவர் மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்க நினைத்தவர்.

ஆய்வு செய்துள்ளேன்
திமுக ஆட்சி காலத்தில் பல பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 14ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான இந்த திட்டப்பணிகளை நானே பலமுறை ஆய்வு செய்துள்ளேன். ஜப்பான் சென்று கையெழுத்திட்டு திரும்பினேன்.

பெறாத பிள்ளைக்கு பேர் வைக்க முயற்சி
மெட்ரோ ரயில் திட்டம் திமுகவின் பிள்ளை என்பதை மத்திய அமைச்சர் வெங்கையா உணர வேண்டும். ஜப்பான் சென்று நிதிக்காக கையெஉண்மையை மறந்து பெற்று எடுக்காத பிள்ளைக்கு பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications