மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகளை இயக்க ஏற்பாடு.. முதல்வர் எடப்பாடியார் அறிவிப்பு
மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல்-நேரு பூங்கா மற்றும் சின்னமலை- டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்தியமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹர்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னேறியுள்ளோம்
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குதிரை வண்டி, மாட்டு வண்டியில் இருந்து மெட்ரோ ரயில் சேவைக்கு முன்னேறியுள்ளோம் என்றார்.

பயண நேரம்
மேலும் அவர் பேசியதாவது, மெட்ரோ ரயில் இதுவரை 1.64 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

அதிநவீன வளர்ச்சிதான்
மெட்ரோ ரயில் சேவைக்கான நிதியை மத்திய அரசு விரைவில் வழங்க வேண்டும். போக்குவரத்தில் அதி நவீன வளர்ச்சிதான் மெட்ரோ ரயில். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ரயிலில் பயணம்
மேலும் 6 குளிரூட்டப்பட்ட சுரங்கப்பாதை ரயில் நிலையங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து எழும்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications