சென்னை மெட்ரோ ரயில்- அக்டோபரில் 2 வழிப் போக்குவரத்து தொடக்கம்
சென்னை: சென்னை, கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை இரண்டு வழித்தடங்களிலும் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
அக்டோபர் மாதம் முதல் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையும் சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரையும் இரண்டு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 24 கி.மீ. தூரம் சுரங்கப் பாதையிலும் 21 கி.மீ. மேம்பாலத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.

தற்போது 2 ஆவது வழித்தடத்திலும் கடந்த வாரம் முதல் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறும்போது "சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக உயர்த்தப்பட்ட பாதையில் கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை 6 கி.மீ. தூரத்துக்கு தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் ஒரு சில மாதங்களில் முடிவடையும். இதையடுத்து வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர் அசோக்நகரில் இருந்து ஆலந்தூர் இடையே கூடுதலாக 4 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதே நேரம் ஷெனாய்நகரில் இருந்து அண்ணாநகர் டவர் வரை சுரங்க ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்துள்ளது.
தற்போது அண்ணாநகர் டவரில் இருந்து திருமங்கலம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த பணிகள் முடிந்த தும் ஷெனாய்நகர் - கோயம்பேடு வழியாக ஆலந்தூர் வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் அடுத்து ஆண்டு மத்தியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications