80 கி.மீ வேகத்தில் ஓடிய சென்னை மெட்ரோ ரயில்.. ஓட்டிப் பரிசோதித்த பெண் டிரைவர்!
சென்னை: சென்னையில் கோயம்பேடு, ஆலந்தூர் இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயிலை ஓட்டிப் பார்த்துப் பரிசோதித்துள்ளனர். இந்த ரயிலை ஓட்டியவர் பெண் என்ஜின் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் செயல்பாட்டை நெருங்கி விட்டது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதை தயாராகி விட்டது. இந்த மார்க்கத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தி்ல சேவை தொடங்கவுள்ளது. இதற்கான பணிகளை தற்போது அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

தண்டவாளம் அமைப்பு, சிக்னல்கள், மின்சார இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படைப் பணிகளும் முடிந்து விட்டன. இந்த மார்க்கத்தில், கோயம்பேடு, சி.எம். பி.டி, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல் மற்றும் ஆலந்தூர் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் உள்ளன. இங்கு டிக்கெட் கவுண்டர் உள்ளிட்ட அமைப்பது உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானமும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெயின் லைனில் ரயில்கள் இயக்கி பரிசோதனையும் நடந்து வருகிறது. இந்த பாதையில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கிப் பார்த்தனர். இதை பெண் டிரைவர் ஒருவர் மேற்கொண்டார். சோதனையின்போது, சிக்னல், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications