காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்ந்தது!
Recommended Video
சென்னை: காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் பெய்துவரும் கடுமையான மழை காரணமாக காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

என்ன முக்கியம்
முக்கியமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு இன்றும் மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அங்கு 1000க்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

தண்ணீர்
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 85.43 அடியாக உயர்ந்து உள்ளது. நேற்று இரவே அணையின் நீர்மட்டம் 71 அடியை தொட்டுவிட்டது.

என்ன வெள்ளம்
வெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.50 லட்சம் கன அடியாக உயரும் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1.53 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

அதிகமாகும்
பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த 4 அல்லது 5 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால், காவிரியில் இன்னும் அதிக அளவில் தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications