சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 8வது மேல்மட்ட மதகில் இருந்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவத்தை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் துவங்கி செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் நடவுப்பணிகள் முடிவடைந்திருக்க வேண்டும். இதற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாகவே ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு செப்டம்பர் 20ம் தேதி முதல் டெல்டாவுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இன்று காலையில் 8வது மேல்மட்ட மதகில் இருந்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து விட்டார். மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பாவில் வழக்கமாக சாகுபடி செய்யப்படும் நீண்ட கால ரகங்களை சாகுபடி செய்ய இயலாது. மத்திய கால ரகங்களைத்தான் சாகுபடி செய்ய முடியும். இன்னும் காலதாமதம் ஆனால் குறுகிய கால ரகங்களை விதைக்கும் நிலை ஏற்படும். தாமதமாக சம்பா சாகுபடியை துவங்குவதால் வடகிழக்கு பருவமழையின்போது பயிர்கள் 3அடிக்கும் மேல் வளரவில்லை என்றால் மழை நீரில் சம்பா அழுகும் நிலை உருவாகும்.

தஞ்சை மாவட்டத்தில் 46,500ஏக்கரில் மட்டுமே நேரடி நெல் விதைப்பு நடந்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் வெண்ணாற்று பாசன பகுதிகளில் இதுவரை 3.5லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பு நடந்துள்ளது. இன்னும் நேரடி விதைப்பு நடக்க உள்ளதால் 5 லட்சம் ஏக்கர் நேரடி விதைப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணியை துவங்க ஆற்றுபாசன விவசாயிகள் தீவிரம் காட்டிவருகின்றனர்.
பொதுவாக சம்பா சாகுபடிக்கு தினமும் ஒன்னேகால் டிஎம்சி வீதம் நூறு நாட்களுக்கு 125 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். ஆனால் மேட்டூர் அணையில் இப்போது 48.556 டிஎம்சி மட்டுமே உள்ளது. அதில் 20டிஎம்சி குடிநீருக்காக அணையில் இருப்பு வைக்க வேண்டும். இதனால் இப்போது 100 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இன்று தண்ணீர் திறக்கப்பட்டாலும் அதை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து, அதன் பிறகு மழை பொய்த்துவிட்டதால் விவசாயிகள் பாதிக்கபடுவார்கள்.
மேட்டூர் அணையில் இருந்து தினமும் வினாடிக்கு 20ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால்தான் கடைமடை வரை தண்ணீர் வந்தடையும். இல்லை எனில் சம்பா சாகுபடிக்கு உதவாது. இதனால் டெல்டாவில் 13லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பாதிக்கும் என்பது விவசாயிகளின் அச்சம். அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு திட்டத்தை அரசே கொண்டு வந்து அதற்கான பிரீமியத்தை அரசே செலுத்த வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications